சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீரென கசிந்து வரும் தகவல்கள்.. தொகுதி மாறி போட்டியிட முடிவா.. என்ன நடக்கிறது அதிமுகவில்..?

முதல்வர் தொகுதி மாறி போட்டியிட யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் அமைச்சர்களின் ஒருசில யோசனைகளுக்கு அக்கட்சியின் தலைமை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி முற்றுப்புள்ளி வைத்துவிட்ட நிலையில், இப்போது அதே யோசனையில் முதல்வர் தரப்பும் மூழ்கியுள்ளதாக கூறப்படுவது பெரும் எதிர்பார்ப்பை தந்து வருகிறது.

Recommended Video

    தொகுதி மாறி போட்டியிட முடிவெடுக்கும் அதிமுக தலைவர்கள்?

    தமிழகத்தில் கொரோனா தொற்றுகள், அது தொடர்பான விவாதங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, தேர்தல் குறித்த விவாதங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன.. தமிழக தேர்தல் அரசியல் களத்தில் கூட்டணிக்கென்று மிக முக்கியமான பங்கு உள்ளது.. பெரும்பாலான தேர்தல்களில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது இந்த கூட்டணிகள்தான்.

    இப்போது திமுக, அதிமுக என்ற இரு மெகா கட்சிகளும் எந்த கட்சிகளை தங்கள் கூட்டணியில் தக்கவைப்பது, உடனடியாக கழட்டி விடுவது என்ற வேலைகளில் இறங்கிவிட்டன.

    அதிமுக அரசுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்த திமுக எம்.எல்.ஏ.. திருவண்ணாமலையில் வெடித்த சர்ச்சை..!அதிமுக அரசுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்த திமுக எம்.எல்.ஏ.. திருவண்ணாமலையில் வெடித்த சர்ச்சை..!

    போட்டி

    போட்டி

    தற்போது அதிமுகவில் அது தொடர்பான நித்தம் ஒரு செய்தி வெளியாகி கொண்டே இருக்கிறது.. அந்தவகையில் அமைச்சர்கள் தொகுதி மாறி போட்டியிடலாம் என்று சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி கசிந்தது.. சொந்த தொகுதியை விட்டு வேறு தொகுதியில் போட்டியிட்டால், கூடுதல் வாக்குகளை பெறலாம் என்பதால் இப்படி யோசித்துள்ளதாகவும், ஆனால், இதற்கு அதிமுக தலைமை எடுத்த எடுப்பிலேயே கடிவாளம் போட்டு ஆஃப் செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

    சொந்த தொகுதி

    சொந்த தொகுதி

    "தொகுதி மாறி போட்டியிடணும்னு யாருமே நினைக்க கூடாது. அப்படி தொகுதி மாறினால், அமைச்சர்கள் சொந்த தொகுதியில் எதுவுமே செய்யலையா? ஏன் மக்களுக்கு பயந்துக்கிட்டு, சொந்த தொகுதியில் நிக்காமல், இன்னொரு தொகுதியில் போட்டியிடறாங்க என்று திமுக தரப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துவிடும்.. அவர்கள் பேசுவதற்கு நாம் இடத்தரக்கூடாது.. அதனால், போட்டியிடக்கூடிய அமைச்சர்கள், சிட்டிங் தொகுதியில்தான் இந்த முறையும் போட்டியிடணும்" என்று உத்தரவு போடப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

    முதல்வர்

    முதல்வர்

    ஆனால், இப்போது விஷயமே வேறுவகையாக கசிந்து வருகிறது.. அதிமுக உத்தரவு போட்டும், அமைச்சர்கள் மத்தியில், தேர்தல் பயம் ஆரம்பித்துவிட்டதாம்.. அனைத்து அமைச்சர்களுமே தாங்கள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதியிலிருந்து மாறி, வேறு தொகுதியில் போட்டியிடும் முடிவை கைவிடவே இல்லையாம். அதிலும் இந்த மாற்றம் கொங்கு மண்டலத்தில்தான் பெருவாரியாக நடக்க போகிறதாம்.

    யோசனை

    யோசனை

    இவர்கள் வேறு தொகுதிகளில் போட்டியிட தயாராவதால், அந்த தொகுதியில் இருக்கக்கூடிய அதிமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர்... இதனால் அவர்கள் முதல்வரிடம் சென்று இதை பற்றி முறையிட்டுள்ளனர்.. அதற்கு முதல்வரோ, "நானே இந்த முறை என் தொகுதியில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்று யோசிக்கிறேன்' என்றாராம்.

    பரபரப்பு

    பரபரப்பு

    இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருப்பதால், வன்னியர்கள் நிறைந்த எடப்பாடி தொகுதியைவிட கொங்குவேளாள கவுண்டர்கள் நிறைந்துள்ள கோவை மாவட்ட தொகுதிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து போட்டியிட உள்ளதாக எடப்பாடியார் கருதுகிறதாம்.

    English summary
    CM Edapadi Palanisamy new Strategy: TN Assembly Election 2021
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X