சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மச்சக்கார முதல்வர்.. பிரச்னைகளை.. சிரித்தே சமாளிக்கும்.. எடப்பாடியார்.. இன்று பிறந்த நாள்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்னைக்கு அரசு கவிழும், நாளைக்குள்ள நிச்சயம் கவிழ்ந்துவிடும் என்று கெடு விதிக்கப்பட்ட நிலையில், வெற்றிகரமாக ஆட்சியை தொடர்ந்து கொண்டிருக்கும் நம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்த நாள்.

Recommended Video

    CM EdappadiPalanisamy 66 th birthday today

    தான் ஒரு விவசாயி என்பதை மறக்காமல் பதிவு செய்து வருபவர் எடப்பாடி பழனிசாமி.. இவர் ஆட்சி பொறுப்பேற்றதுகூட மிக மிக தடுமாற்றமான அரசியல் சூழலில்தான்.. முதல்வராக பதவியேற்றாலும் எந்த பிறந்த நாளையும் இவர் ஆடம்பரமாக கொண்டாடியதே இல்லை.. அதில் விருப்பமும் இல்லை.

    எளிமையான முதல்வர் என்ற பெயரை எடுத்த எடுப்பிலேயே பெற்றுவிட்டார்.. இவரது ஆட்சியை சாதுர்யமான ஆட்சி என்று கூட சொல்லலாம்.

    சென்னை, மும்பைக்கு வாய்ப்பு இல்லை.. மோடி கேட்ட சென்னை, மும்பைக்கு வாய்ப்பு இல்லை.. மோடி கேட்ட "எக்சிட் பிளான்".. மே 17க்கு பின் என்ன நடக்கும்?

    எதிர்க்கட்சிகள்

    எதிர்க்கட்சிகள்

    காரணம், எதிர்கட்சிகளால் வந்த பிரச்னையைவிட சொந்த கட்சியால் ஏற்பட்ட குழப்பங்களும், நெருக்கடிகளும்தான் அதிகம்... இவைகளை எல்லாம் கடந்து "தனி ஒருவன்" என்ற பாணியில்தான் ஆட்சியை நடத்த நல்ல திறமையே தேவை.. அது நம் முதல்வருக்கு நிறைய உள்ளது. இரட்டை தலைமை என்ற விமர்சனம் எழுந்து அடங்கியபோதிலும், பிளவு என்று இல்லாமல் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துள்ளதே இவரது பிளஸ்!!

     நல்ல முதல்வர்

    நல்ல முதல்வர்

    "நல்ல முதல்வர்" என்று சொல்வதைவிட, "பரவாயில்லை" என்ற கேட்டகிரிக்குள்ளும் இவர் எப்போதோ வந்துவிட்டார்.. கெடுபிடி இல்லாத முதல்வர், எளிமையான முதல்வர், சாமான்யர் எப்போது வேண்டுமானாலும் இவரை நெருங்கி பழகலாம் என்ற அணுகுமுறை இவைகளே எடப்பாடியாரை இப்போதுவரை தூக்கி நிறுத்தி வருகிறது. வழக்கமாகவே பிறந்த நாளை கொண்டாடாத முதல்வர் இன்றைய நாளையும் எளிமையாகவே எதிர்கொள்வார் என தெரிகிறது.. காரணம், நாடு ஒரு இறுக்கமான சூழலில் பயணிக்கிறது.. தமிழகம் கொரோனாவால் தத்தளிக்கிறது.

     துரைமுருகன்

    துரைமுருகன்

    நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில்கூட ஜாலியாகவும், துரைமுருகனை கிண்டல் செய்து கொண்டும் இருந்தார் முதல்வர்.. அப்போதுகூட கொரோனா தாக்கம் இவ்வளவு வரும் எனறு நமக்கு தெரியாது. இதற்கு பிறகுதான் நம்மை ஆட்கொள்ள தொடங்கியது.. இது நம்மைவிட முதல்வருக்குதான் அதிக சவாலை தந்து வருகிறது. இது மட்டுமில்லை.. சென்ற வருடத்தை போலவே இந்த முறையும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாட போகிறது.. அதற்கான கட்டமைப்புகளை தொடங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்!

     நீட் தேர்வு

    நீட் தேர்வு

    ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நீட் தேர்விலிருந்து விலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு'என்று எடப்பாடியார் அன்று சூளுரைத்தார்.. ஆனால் கடந்த மார்ச் மாதம், 'நீட் நிரந்தர விலக்கு' என்பதிலிருந்து 'நீட் தேர்வில் இடஒதுக்கீடு' என தலைகீழ் நிலைப்பாட்டினை எடுத்துள்ளார்.. இதனை பரிசீலித்து கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு மீண்டும் நிலைநாட்டும் முக்கிய பொறுப்பிற்குள் முதல்வர் இன்று உள்ளார்!!

    அணுகுமுறை

    அணுகுமுறை

    இவை அத்தனையையும் அவர் தவிடுபொடியாக்கிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. காரணம் ரொம்ப சிம்பிள்.. 3 வருடங்களில் இல்லாமல், கொரோனா செயல்பாட்டில் ரெண்டே மாதங்களில் "நல்ல முதல்வர்" என்ற பெயரை அனாயசியமாக தட்டி சென்றவர் என்பதால்தான்.. மாற்றுகட்சியினரையும்கூட தன் அணுகுமுறையால் திகைக்க வைத்தவர். இந்நேரம் வேறு யாராக இருந்திருந்தால், ஆட்சி கிலிகண்ட போதெல்லாம், பதவி பொறுப்புகள் என்றோ பறிபோயிருக்கும்.. "சாதுர்யமும், அதிர்ஷ்டமும் எங்க முதல்வர் பக்கம் இருக்கிறது, அவர் மச்சக்கார முதல்வர்" என்று ரத்தத்தின் ரத்தங்கள் பூரித்து சொல்கிறார்கள்.

     பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    எனவே அவர் முன்பு வரிசை கட்டி நின்றுள்ள மொத்த சவால்கள், பிரச்சனைகளையும் நிச்சயம் களைவார் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு நிரம்பவே உள்ளது.. இதோ கவிழும் ஆட்சி என்று பூச்சாண்டி காட்டி கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் துணிந்து நிற்கிறார் எடப்பாடி.. நீண்ட ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்று "ஒன் இந்தியா தமிழ்" அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது!!

    English summary
    cm edapadi palanisamy 66th birthday today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X