சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜோ பிடன், கமலா ஹாரிஸ்க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்காவின் 46வது அதிபராகும் ஜோ பிடனுக்கும், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்க்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், அமெரிக்காவின் 46வது அதிபராகும் ஜோ பிடனுக்கும் வாழ்த்துக்கள். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அமெரிக்காவின் துணை அதிபராக வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் கமலா ஹாரிஸ். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

CM edappadi palanisamy and ramadoss heartfelt congratulations to Joe Biden and kamal harris

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அந்த நாட்டின் 46-ஆவது அதிபராக ஜோ பிடனுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராமதாஸ் இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்த நாட்டின் 46-ஆவது அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ள இருவருக்கும் வாழ்த்துகள்!

CM edappadi palanisamy and ramadoss heartfelt congratulations to Joe Biden and kamal harris
CM edappadi palanisamy and ramadoss heartfelt congratulations to Joe Biden and kamal harris

திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தான் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்கர் அல்லாத முதல் பிற நாட்டவர் ஆவார். இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு ஆக்கப்பூர்வமான வளர்ச்சி காண அவரது வெற்றி உதவட்டும்!" என்று கூறியுள்ளார்.

English summary
cm edappadi palanisamy and ramadoss heartfelt congratulations to Joe Biden and kamal harris. who has been elected as the 46th president of United States and us wise predient
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X