Rajini Birthday: வயதை வென்ற வசீகரம்! கள்ளம் கபடமற்ற நெஞ்சம்! ரஜினிக்கு, ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: வயதை வென்ற வசீகரம், மேடை ஏறினாலே அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை, கள்ளம் கபடமற்ற நெஞ்சம் என ரஜினிகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!

மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!
ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் #SuperStar @rajinikanth அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகளாக ஒரு சகாப்தமாக திகழ்ந்து வருகிறார் ரஜினி. அவருடைய 76 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக ரஜினிக்கு ஏராளமானோர் நேற்று இரவு 12 மணி முதலே வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
1975 ஆம் ஆண்டு "அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த், அன்று முதல் இன்று வரை பாக்ஸ் ஆபிஸ் கதாநாயகனாக இருந்து வருகிறார். அதிலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இடத்தை ஒருவரும் பிடிக்கவில்லை.
நகைச்சுவை, காதல், சண்டை என எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிப்பார். எந்திரன் படத்தின் மூலம் முதல் முறையாக ரூ 100 கோடி வசூலித்த தமிழ் படம் என்ற சாதனையை படைத்தார். சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 இன்று வரை ரூ 800 கோடிக்கு மேல் வசூலை தந்துள்ளது. அது போல் கூலி ரூ 400 கோடி வசூல் என்கிறார்கள். ரஜினிக்கு இந்தியாவில் மட்டுமில்லை, ஜப்பான் போன்ற நாடுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். "முத்து" படத்தின் மூலம் அவர் உலக நாடுகளில் உள்ளவர்களையும் கவர்ந்துள்ளார்.

170 க்கும் மேற்பட்ட படங்தகளில் நடித்துள்ள ரஜினி, ஜெயிலர் 2 எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் எடுக்கப்பட்டு வரும் இந்த படம் வருகிற 2026 ஜூன் மாதத்தில் வெளியாக இருக்கிறது. மேலும் கமல்ஹாசன் தயாரிக்கப் போகும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொடுக்கவும் இருக்கிறார். இதனால் ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு டபுள் டமாகாவாக இருக்க போகிறது.
இன்று அவரது பிறந்தநாளையொட்டி 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படம் 4கே தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்ய இருக்கிறது. 25 ஆண்டுகள் கழித்து இத்திரைப்படம் இன்றைய தினம் அந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த படத்தின் போது ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினி பகிர்ந்து கொண்டார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!











Click it and Unblock the Notifications