மதவாத கட்சியாக எந்த கட்சியையும் அனுமதிக்க முடியாது.. பாஜக மீது முதல்வர் ஸ்டாலின் அட்டாக்
சென்னை: மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்பட அனுமதிக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் பாஜகவின் பெயரை குறிப்பிடாமல் பேசியுள்ளார். இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஸ்டாலின் இவ்வாறு விமர்சித்திருந்தார்.
சென்னை தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரியில் நடந்த இந்திய வரலாற்று பேரவையின் 81ஆவது மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் கற்பனை கதைகளை வரலாறுகளாக சிலர் கூறி வருகிறார்கள். கற்பனை திரிபுதான் நாட்டை எதிர்கொண்டுள்ள அபாயமாக இருக்கிறது. நம்மை நாமே படிப்பதன் மூலம் எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

மதவாத கட்சி
மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்பட அனுமதிக்க முடியாது. வரலாற்று உணர்வுகளை ஊட்டுவது இன்றைய காலத்தின் தேவையாகும். மதசார்பின்மை என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கொள்கையாகும். அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை மீறப்படுவது ஒரு போதும் அனுமதிக்க முடியாது. கீழடி, சிவகளை, ஆதிச்சநவல்லூர் அகழாய்வுகள் பழங்கால நாகரீகத்தை பறைசாற்றுகின்றன. கீழடியில் மிகப் பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.

வரலாறு
எந்த அமைப்பாக இருந்தாலும் அதை உருவாக்குவது எளிது. அதைத் தொடர்ந்து நடத்துவதுதான் கடினம். கற்பனையாக கூறப்படும் வரலாற்றை நம்பி ஏமாந்துவிடக் கூடாது. உண்மைமையான வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் இலக்கு. அனைத்து மக்களின் வாழ்வியலை பிரதிபலித்தே வரலாறாக இருக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம்.

வேலைக்காக!
வேலைக்காக சம்பளத்திற்காக மட்டும் அல்ல. நம்மை அறிந்து கொளள வரலாற்றை படிக்க வேண்டும். கடந்த கால படிப்பதன் மூலம் நிகழ்கால வரலாற்றை படைக்க முடியும், எதிர்காலத்தை கணிக்க முடியும். கல்வி, மொழி, பண்பாடு, நாகரீகம் ஆகிய அனைத்திலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகள் காக்கப்பட வேண்டும்.

மதசார்பற்ற சமுதாயம்
மதசார்பற்ற சமுதாயத்தை உருவக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள்தான். ஆனால் நாங்கள் பழமைவாதிகள் அல்ல. அறிவியல்பூர்வமான ஆதாரங்கள அடிப்படையில்தான் பழம்பெருமைகளை நாங்கள் பேசுகிறோம். மதசார்பற்ற, அறிவியல் பூர்வமான வரலாற்றை எழுதுவதை ஊக்குவித்து வருகிறது இந்திய வரலாற்று பேரவை. மன்னர்களின் வாழ்க்கை மட்டுமே வரலாறு அல்ல. வரலாற்றை படிப்போம், வரலாறு படைப்போம் என முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். மதவாத கட்சி என பாஜகவை மறைமுகமாக முதல்வர் விமர்சித்திருந்தார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!












Click it and Unblock the Notifications