நேரா துரைமுருகன் வீட்டுக்கு வண்டியை விட்ட முதல்வர் ஸ்டாலின்.. அருகில் நெருங்கி அமர்ந்து ஆலோசனை!
சென்னை: அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கே சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தச் சந்திப்பின்போது திமுக இளைஞரணி மாநாடு, அமலாக்கத்துறை, ஆளுநர் விவகாரங்கள் குறித்துப் பேசியதாக கூறப்படுகிறது.
மூத்த அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனை இன்று அவரது வீட்டுக்கே நேரில் சென்று சந்தித்துப் பேசினார் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அப்போது, திமுக எம்.பி கதிர் ஆனந்த்தும் உடன் இருந்தார். அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிர்வாகி குடியாத்தம் குமரன் அண்மையில் பேசிய வீடியோ சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், துரைமுருகன் வீட்டிற்கே முதல்வர் சென்றுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மணல் குவாரிகளில் ரெய்டு நடத்தியது. அமைச்சர் துரைமுருகன் பொறுப்பு வகிக்கும் கனிம வளத்துறை அலுவலகத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது. மேலும், 2019 தேர்தலின்போது நடந்த ரெய்டில் சிக்கிய பணம் தொடர்பாக, அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்.பியுமான கதிர் ஆனந்த்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
ஏற்கெனவே அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ள நிலையில், கதிர் ஆனந்த் நெருக்கடியில் இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே தான், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன், துரைமுருகன், 60 ஆயிரம் கோடி சம்பாதித்ததாகவும், நான் ஆதாரங்களை வெளியிட்டால் துரைமுருகனுக்கு அமைச்சர் பதவி இருக்காது என்றும் பேசி பரபரப்பைக் கிளப்பினார். இப்படியான சூழலில் முதல்வர் ஸ்டாலின் துரைமுருகன் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
வரும் டிசம்பர் 17ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுகவின் இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடக்கவிருக்கும் மாநாடு இது என்பதால் அரசியல் களத்தில் இது மிக முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று பேச உள்ளார்.

சேலத்தில் மாநாடு நடக்கவிருக்கும் இடத்தில், மாபெரும் பந்தல் மற்றும் மேடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்த மாநாட்டிற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, செயல் வீரர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். ஏற்பாடுகளை தீவிரமாக மேற்பார்வை செய்து வருகிறார்.
திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான முதல்வர் ஸ்டாலின் இன்று, அமைச்சர் துரைமுருகனை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, இளைஞரணி மாநாடு குறித்து அவருடன் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அமலாக்கத்துறையின் நெருக்கடிகள் குறித்தும் அவருடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications