ஆந்திராவுக்கு நாளை செல்கிறார் முதல்வர் விஜய்! சந்திரபாபு நாயுடு + பவன் கல்யாணுடன் சந்திப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவுக்கு நாளை முதல்வர் விஜய் பயணம் செய்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. அங்கு விஜயவாடா உத்சவ் 2.0 எனும் நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என சொல்லப்படுகிறது.

தமிழக முதல்வர் விஜய், நாளை ஆந்திர மாநிலத்திற்கு அரசு முறை பயணமாக செல்கிறார். முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆந்திராவுக்கு செல்கிறார்.

joseph vijay andhra pradesh

இந்த பயணத்தின் போது விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது கிருஷ்ணா நதி நீர் பங்கீடு விவாரம் குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் முதல்வர் விஜய் பேசுவார் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து விஜயவாடாவில் உள்ள "விஜயவாடா உத்சவ் 2.0" எனும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பேச்சுவார்த்தை, கலாச்சார விழாவில் பங்கேற்கும் விஜய்யின் ஆந்திர பயணம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அது போல் அங்கு கனகதுர்க்கை அம்மன் கோயிலுக்கும் அவர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயவாடா உத்சவ் எனும் நிகழ்ச்சி கடந்த 11 ஆம் தேதி முதல் வரும் 20 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

விஜயவாடா உத்சவ் 2.0

கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள புன்னமி காட், மகனேனி பசவ புன்னையா ஸ்டேடியம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த விழாவை நேற்றைய தினம் மத்திய அமைச்சர் ராம் மோகந் நாயுடு தொடங்கி வைத்தார். பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், டிரோன் காட்சிகள், வாண வேடிக்கைகள் நடத்தப்படும்.

அத்துடன் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கைவண்ணத்தில் செய்யப்பட்ட பொருட்களை, விற்பனை செய்ய 650-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை அக்டோபர் 13 ஆம் தேதி விஜய்யும் , அக்டோபர் 14ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம்

1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு - கிருஷ்ணா நதி படுகை மாநிலங்களான ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவானது. ஆந்திர அரசு, ஆண்டுதோறும் எல்லையான கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு 12 டிஎம்சி கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தமாகும். அதாவது ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி , ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என இரு பருவங்களாக 12 டிஎம்சி வழங்கப்பட வேண்டும்.

கிருஷ்ணா நீர் வரவில்லை

ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் திறக்கப்படும் தண்ணீர், கண்டலேறு- பூண்டி கால்வாய் வழியாக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜீரோ பாயிண்ட் வந்து சேருகிறது. அங்கிருந்து பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வந்து அதன்பிறகு, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு சென்னையில் குடிநீர்த் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணா நதிநீர் முழுமையாக தமிழகத்திற்கு வரவில்லை. இதுகுறித்துதான் விஜய் பேசவுள்ளார்.

கர்நாடகாவுக்கு செல்ல முடியாத விஜய்

காவிரி விவகாரத்தில் கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமாருடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்த செல்வதாக இருந்தது. ஆனால் அங்கு விஜய்க்கு எதிராக கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் விஜய்யை, கர்நாடகாவுக்கு வரவேண்டாம் என முதல்வர் டி.கே.சிவக்குமார் கேட்டுக் கொண்டார். இது தமிழகத்தில் பெரும் பிரச்சினையானது. ஒரு முதல்வரை மதிக்காமல் அவரை வரவேண்டாம் என சொல்லி அவமானப்படுத்துவதா? தங்கள் மாநிலம் வரும் விருந்தினருக்கு பாதுகாப்பு கொடுப்பதுதானே அந்த மாநிலத்தின் கடமை என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+