மாலத்தீவில் தவிக்கும் மீனவர்கள்.. படகுகள் பறிமுதல்! வெளியுறவுத் துறை அமைச்சருக்கு சிஎம் விஜய் கடிதம்
சென்னை: மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும் அவர்களின் 3 மீன்பிடி விசைப் படகுகளை மீட்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
அது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்," தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் , மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் 3 மீன்பிடி விசைப்படகுகளை மீட்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர்க்கு இன்று (15.10.2026) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள், அவர்கள் பயன்படுத்திய மூன்று மீன்பிடி விசைப்படகுகளுடன், மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் 13.10.2026 அன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் தலையிட்டு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்விவகாரம் தொடர்பாக மாலத்தீவு அரசுடன் தூதரகத்தின் வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும், அவர்களது மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக மீட்பதற்கும், மீனவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் விவகாரத்தில் தலையிட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கும், ஒட்டுமொத்த மீனவ சமூகத்திற்கும் மிகுந்த நம்பிக்கையையும் ஆறுதல் அளிக்கும்" எனவும் அந்த கடிதத்தில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
