தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு: மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல் கல்லூரிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. அதேபோலதான், கல்லூரிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டிருப்பதை போலவே கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள்
ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நேரடியாக நடைபெற வேண்டும். இளங்கலை 2-ம் ஆண்டு, முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வகுப்பு நடைபெற வேண்டும்.

பொறியியல் படிப்புகள்
இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வகுப்பு நடைபெறும். பொறியியல் படிப்புகளுக்கும், ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடத்தப்படும்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தடுப்பூசி செலுத்த வேண்டும்
உயர்கல்வி நிலையங்களில் உள்ள விடுதிகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விடுதிகள் செயல்படவேண்டும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகம் இதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இலவச பாஸ்
தடுப்பூசி போட தவறிய கல்லூரி மாணவ மாணவியர் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிக்க கோரப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications