வணிக சிலிண்டர் விலை உயர்வு.. தீபாவளி நேரத்தில் அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு! எவ்வளவு கூடியிருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.11 அதிகரித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருப்பது வணிகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதே சமயம் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.957.50 ஆக உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தியாவில் மாதம் தோறும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதத்திலும் 1 ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

Commercial Gas cylinder price Hike

அந்த வகையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலை நிலவரம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டன. அதன்படி, வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் அதாவது 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.11 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டரின் விலை ரூ. 3,016-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நேரத்தில், வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருப்பது வணிர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வணிக சிலிண்டர் விலை உயர்வால், இனிப்பு பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை உயரக்கூடும் என்பதால் வாடிக்கையாளர்களும் அப்செட் ஆகியுள்ளனர்.

கடந்த மாதம் ரூ.66.50 உயர்த்தப்பட்ட நிலையில், இந்த மாதமும் 11 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. அதே சமயம், ஆறுதல் அளிக்கும் விதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.957.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+