மண் சார்ந்த பணிகளுக்கு ஜிஎஸ்டியை உயர்த்த பரிந்துரை! புது சோதனையால் விழிபிதுங்கும் ஒப்பந்ததாரர்கள்!
சென்னை: மண்சார்ந்த ஒப்பந்தப் பணிகளுக்கு ஜி.எஸ்.டி.யை 5 சதவீதத்திலிருந்து 12% ஆக உயர்த்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை பரிந்துரை செய்துள்ளது.
இது கால்வாய் தூர்வாருதல், பைப்லைன் போடுதல், உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளை டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு புது தலைவலியாக அமைந்துள்ளது.
ஏற்கனவே அரசியல் குறுக்கீடுகளால் பலருக்கும் கப்பம் கட்டி அழுகும் ஒப்பந்ததாரர்கள் மண் சார்ந்த பணிகளுக்கான ஜி.எஸ்.டி. உயர்வால் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

இதனிடையே நிதித்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் அனைத்து துறை தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், புதிதாக ஒப்பந்தம் வெளியிடும் துறைகள் புதிய ஜி.எஸ்.டி.வரி விதிகப்படி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதேபோல் மண்சார்ந்த பணிகளுக்கு 5% முதல் 12% வரையும் வரலாற்று நினைவுச்சின்னங்கள், கால்வாய்கள், அணைகள், பைப்லைன்கள், நீர் விநியோக திட்டங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு 12% முதல் 18% வரையும் ஜி.எஸ்.டி.யை உயர்த்த வணிகவரித்துறை பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதம் காரணமாக செலவாகும் கூடுதல் நிதிக்கு அனுமதி பெற, சம்பந்தப்பட்ட துறைகள் பணி வாரியாக கூடுதல் நிதி தேவையை மாற்றி மதிப்பீடு செய்து அனுப்புமாறு அவர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜே.சி.பி.இயந்திரம் மூலம் மண் சார்ந்த அரசுப் ஒப்பந்தப் பணிகளை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் இதன் மூலம் அதிருப்திக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications