பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுமா? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில் இதுதான்
சென்னை: இடவசதி இல்லாத பள்ளிகளில் தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிவேகமாக குறைந்துள்ளது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்திய தமிழக அரசு பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படும் என்று அறிவித்தது.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
அதன்படி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளியில் சென்னை அசோக்நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் அங்கு கடைபிடிக்கப்படுகிறதா? என்று அவர் ஆய்வு செய்தார். பின்னர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது ஏன்?
அப்போது அவர் தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் பாதிப்பின்றி கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளி, கல்லூரிகள் செயல்படுகிறது என்று கூறினார்.

இந்த பகுதியில் பள்ளிகள் இயங்காது
மணவர்கள் அல்லது அவர்களது வீடுகளில் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்த்து உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறிய ராதாகிருஷ்ணன் நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் அப்பகுதியில் பள்ளிகள் இயங்காது எனவும் தெரிவித்தார்,

சுழற்சி முறையில் வகுப்புகள்
தமிழகத்தில் மொத்தம் 33.46 லட்சம் மாணவர்கள் இலக்கு உள்ள நிலையில் 77% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 2.5 லட்சம் இலக்கு உள்ள நிலையில் 1.80 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இடவசதி இல்லாத பள்ளிகளில் வகுப்புகள் நடத்துவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் இடவசதி இல்லாத பள்ளிகளில் 3 நாட்கள் கழித்து தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Recommended Video

5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டாம்
தொடர்ந்து கூறிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அடுத்த 2 வாரம் கவனக்குறைவாக இருக்க கூடாது, ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட நோய் தொற்று குறைந்து வருகிறது. 30 விழுக்காட்டிலிருந்து 10 - 12% வரை நோய் தொற்று பரவல் குறைந்துள்ளது 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் அணியக்கூடாது. ஆனால் மற்ற குழந்தைகளுக்கு விழிப்புணர்வு உள்ளது. முகக்கவசம் போட சவாலாக இருக்கும் போது தனி இடத்தில் வந்து தளர்வு படுத்திக்கொள்ளலாம் என்று கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications