தமிழகத்தில் இன்று 5755 பேருக்கு கொரோனா.. எந்த மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்.. விவரம்
சென்னை : தமிழகத்தில் இன்று 5,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 597 பேரும், சேலத்தில் 398 பேரும், திருப்பூரில் 361 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 150 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 5,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 24,55,332 ஆக உயர்ந்துள்ளது.

குணம்
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 8132 பேர் மீண்டனர். இதனால் தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,75,963 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 47,318 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பாதிப்பு
சென்னையில் 350 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,31,127 ஆக உயர்ந்துள்ளது. இதில் 519373 பேர் தொற்றில் இருந்து இதுவரை மீண்டுள்ளனர். சென்னையில் தற்போது கொரோனா பாதிப்புடன் 3611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிப்பு அதிகம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கோவையில் தான் இன்னமும் அதிகமாக உள்ளது. கோவையில் ஒரே நாளில் 698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1199 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 26 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். 6721 பேர் தற்போது கோவையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர்.

ஈரோடு திருப்பூர்
ஈரோட்டில் 597 பேரும், சேலத்தில் 398 பேரும், திருப்பூரில் 361 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் நாமக்கல்லில் 228 பேரும், செங்கல்பட்டில் 259பேரும், சென்னையில் 350 பேரும், திருச்சியில் 220 பேரும், கடலூரில் 138 பேரும், நீலகிரியில் 132 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications