2 நாளாக கஷ்டம்.. மருத்துவனையில் ஓபிஎஸ்! கொரோனா உறுதியானதால் சிகிச்சைக்கு அனுமதி.?
சென்னை : கடந்த இரண்டு நாட்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக அவதி அடைந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக கடந்த சில நாட்களாக தீவிர சுற்றுப்பயணம், ஆலோசனை, சட்ட நடவடிக்கைகள் என மிகவும் பிசியாக இருந்தார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம்.
தன்னைக் கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு தரப்புக்கு அதிகாரம் இல்லை என கூறியதோடு, தன்னை நீக்கியதாக கூறியவர்களை கட்சியிலிருந்து தான் நீக்கி விட்டதாக அதிரடி காட்டி வருகிறார்.

ஓபிஎஸ் உடல்நிலை
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறிய படுகிறது ஓய்வில்லாமல் தொடர்ந்து பணியாற்றியது ஆதரவாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் ஆலோசனை என பிசியாகவே இருந்து வந்துள்ளார். அதே நேரத்தில் கட்சி நடைபெற்று வரும் உட்கட்சி விவகாரங்கள் காரணமாக உடல் நலனில் போதிய அக்கறையின்றி இருந்ததாக கூறப்படுகிறது.

லேசாப அறிகுறிகள்
இதனிடையே உறவினர் ஒருவர் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை சந்திப்பதற்காக இன்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார் ஓபிஎஸ். அப்போது அங்கிருந்த மருத்துவர்களிடம் தனக்கும் இதேபோல சில அறிகுறிகள் இருப்பதாகவும் இரண்டு நாட்களாக லேசான மயக்கம் உடல் வலி காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக கூறியுள்ளார்.

கொரோனா பரிசோதனை
இதையடுத்து அங்கேயே அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அந்த சோதனையில் ஓ பன்னீர் செல்வத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் நோய் தொற்று தீவிரமாக இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுவது நல்லது என மருத்துவர்கள் கூறியதாகவும் இதை எடுத்து மருத்துவமனையின் நான்காவது மாடியில் உள்ள ஒரு அறையில் ஓ பன்னீர்செல்வம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீவிர பரவல்
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதேபோல எடப்பாடி பழனிச்சாமியின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications