சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இல்லை இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம் - மு.க. ஸ்டாலின்

கொரோனாவை முந்தைய அதிமுக ஆட்சி கட்டுப்படுத்தவில்லை என்று முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில் தான் ஆட்சிக்கு வந்தோம் தற்போது 'இல்லை இல்லை' என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். கொரோனாவை முந்தைய அதிமுக ஆட்சி கட்டுப்படுத்தவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Corona not controlling the previous AIADMK government Says MK Stalin

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திபெத்தியர்கள் படையணியை களமிறக்கிய சீனா- டோக்லாமில் மீண்டும் இந்தியாவுடன் வெடிக்க இருக்கும் மோதல்? திபெத்தியர்கள் படையணியை களமிறக்கிய சீனா- டோக்லாமில் மீண்டும் இந்தியாவுடன் வெடிக்க இருக்கும் மோதல்?

கொரோனாவை முந்தைய அதிமுக ஆட்சி கட்டுப்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டினார். கொரோனாவை பற்றி எதுவும் தெரியவில்லை, மருந்து இல்லை, மருத்துவர்கள் இல்லை என்று கூறிவந்தார் எடப்பாடி. அதற்காகத் தான் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தினோம்.

Recommended Video

    சட்டப்பேரவை நிகழ்வுகள் 24-06-2021

    அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினால் கலந்து ஆலோசிக்க முடியும் என்று வலியுறுத்தி இருந்தோம். இப்போது அனைத்து கட்சி கூட்டத்தை நாங்கள் கூட்டிய போது அதிமுக உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர் என்றார்.

    தமிழகத்தில் தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில் தான் ஆட்சிக்கு வந்தோம் தற்போது இல்லை இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம் என்று பெருமிதத்துடன் கூறினார்.

    அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனாவுக்கு தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் மு.க ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

    English summary
    DMK came to power in an environment where there was no vaccine and no oxygen and now he has proudly said that we have created a situation where there is no 'no'. He also accused Corona of not controlling the previous AIADMK regime.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X