சபாஷ்..! கொரோனா 2ஆம் அலை... இந்த 2 மாவட்டங்களில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள்கூட இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை மெல்லக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் இல்லாத மாவட்டங்களாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்படத் தொடங்கியது.

தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது.

கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு

இதையடுத்து மாநிலத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதல் இரண்டு வாரங்கள் தளர்வுகளற்ற ஊரடங்கும், அதன் பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு விரைவில் கட்டுக்குள் வந்துவிட்டது. அதேநேரம் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வர தாமதமானது.

குறையும் கொரோனா

குறையும் கொரோனா

தமிழ்நாட்டில் தற்போது கூடுதல் தளர்வுகளுடன் வரும் ஜூலை 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் பல்வேறு புதிய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா பாதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 50ஆவது நாளாக நேற்றும் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று 3000க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள்

கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள்

கொரோனா பாதிப்பை அதிகமாக உள்ள பகுதிகள் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்படும். கோவை பாதிப்பு அதிகமாக உள்ள கோவையில் தான் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களும் அதிகமாக உள்ளது. கோவையில் 401 கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் உள்ளன. தலைநகர் சென்னையில் மொத்தம் 244 கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் உள்ளன.

இரண்டு மாவட்டங்கள்

இரண்டு மாவட்டங்கள்

அதேபோல நாகையில் இரண்டு, தர்மபுரியில் மூன்று கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களும் உள்ளன. ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்கள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் இல்லாத மாவட்டங்களாக உள்ளன. ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் 2298 கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் உள்ளது

வேக்சின் பற்றாக்குறை

வேக்சின் பற்றாக்குறை

மேலும், கொரோனா தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை தொடர்வதால் மாநிலத்தின் பல பகுதிகளில் வேக்சின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கோவை திருச்சி என முக்கிய நகரங்களில் பல பகுதிகளில் வேக்சின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி இருப்பு குறைவாக உள்ளதால் இரண்டாம் டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+