சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் 3 வாரம்தான்.. சென்னையிலேயே உருவாக்கப்படும் கொரோனா டெஸ்டிங் கருவிகள்.. கலக்கும் தமிழகம்!

கொரோனா தொடர்பான வெப்பநிலை சோதனை கருவிகள் சென்னையிலேயே இன்னும் 2-3 வாரங்களில் தயாரிக்கப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தொடர்பான வெப்பநிலை சோதனை கருவிகள் சென்னையிலேயே இன்னும் 2-3 வாரங்களில் தயாரிக்கப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது.

Recommended Video

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா.. தமிழகத்தின் நிலை என்ன?

    கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகம் எடுத்துள்ளது. இந்தியாவில் 126 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமாக மகாராஷ்டிராவில் மட்டும் 29 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவர்தான் பாதிக்கப்பட்டார்.

    ஆனாலும் அவரும் குணப்படுத்தப்பட்டுவிட்டார். தமிழகத்தில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எப்படி கருவிகள்

    எப்படி கருவிகள்

    கொரோனா வைரஸ் சோதனையை மேற்கொள்ள வெப்பநிலை கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவிகளை மக்களின் நெற்றிக்கு மேல் வைத்து வெப்பநிலை மாறுபாட்டை கண்டுபிடிப்பார்கள். இதன் மூலம்தான் கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை உறுதி செய்து, அதன்பின் சோதனை செய்வார்கள். இந்தியா முழுக்க பல்லாயிரம் கொரோனா வைரஸ் சோதனை கருவிகள் பயன்பாட்டில் உள்ளது.

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    ஆனால் இந்த கருவிகள் எதுவும் இந்தியாவில் உருவாக்கப்படவில்லை. இந்த கொரோனா வைரஸ் சோதனை கருவிகள் எல்லாம் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது. ஜெர்மனியில் இருந்து இந்த கருவிகள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த கருவியை உருவாக்கும் நிறுவனங்கள் எதுவும் இல்லை. இதன் விலை அதிகம் உள்ளது.

    விமானம் எப்படி

    விமானம் எப்படி

    அதேபோல் விமான போக்குவரத்து பிரச்சனை காரணமாக இந்த கருவிகளை இறக்குமதி செய்வதிலும் நிறைய பிரச்சனைகள் உள்ளது. இந்த நிலையில்தான் கொரோனா தொடர்பான வெப்பநிலை சோதனை கருவிகள் சென்னையிலேயே இன்னும் 2-3 வாரங்களில் தயாரிக்கப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது. சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனமான ஹெல்த்கேர் குரூப் நிறுவனம் இந்த கருவியை உருவாக்கி உள்ளது.

    சோதனை செய்து வருகிறது

    சோதனை செய்து வருகிறது

    இந்த கருவியை தற்போது அந்த நிறுவனம் சோதனை செய்து வருகிறது. அதன்பின் 3 வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு அந்த நிறுவனம் கருவியை கொண்டு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். வெறும் 500-1000 ரூபாயில் இந்த கருவிகள் இதனால் சந்தையில் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து இதை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள்.

    செம பாஸ்

    செம பாஸ்

    அதேபோல் தமிழகத்தில் இருக்கும் வேறு சில நிறுவனங்கள் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்து வருகிறது. கொரோனா தொடர்பாக மிக தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கொரோனாவிற்கு மருந்து தமிழகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை வைத்து இருந்தார். தமிழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதற்காக தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.

    English summary
    கொரோனா தொடர்பான வெப்பநிலை சோதனை கருவிகள் சென்னையிலேயே இன்னும் 2-3 வாரங்களில் தயாரிக்கப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X