சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பு... முன் களப்பணியாளர்களுக்கு இழப்பீடு குறைப்பு... டிடிவி தினகரன் கண்டிப்பு!!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு இன்னுயிரை இழக்கும் முன் களப்பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த நிதி ரூ.25 லட்சமாக குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று நேரு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.

Coronavirus compensation to health officials have reduced condemned by TTV Dhinakaran

இதுகுறித்தும் கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் நிலச்சரிவு, விமான விபத்து குறித்து வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார். அதில், '' கொரோனா தடுப்புப்பணிகளில் ஆரம்பம் முதலே 'சொல்வது ஒன்று ; செய்வது வேறொன்று' என செயல்படும் தமிழக அரசின் இந்த அறிவிப்பு உயிரைப் பணயம் வைத்து பெருந்தொற்று நோய்க்கு எதிராக போராடியவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

எனவே, முன்பு அறிவித்தபடியே கொரோனா தடுப்புப்பணிகளில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அளித்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, தூத்துக்குடி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 25க்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த மன வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது

இந்தியாவில் கொரோனா... 24 மணி நேரத்தில் 60000 பதிவு... உயிரிழப்பு 933!! இந்தியாவில் கொரோனா... 24 மணி நேரத்தில் 60000 பதிவு... உயிரிழப்பு 933!!

ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து நிகழும் இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கான தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்திட வேண்டும். உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோழிக்கோடு விமான விபத்து பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Coronavirus compensation to health officials have reduced condemned by TTV Dhinakaran
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X