சென்னையில் அதிகம்.. அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி.. தமிழகத்தில் எங்கெல்லாம் கொரோனா பாதிப்பு உள்ளது?
தமிழகத்தில் கொரோனா காரணமாக எந்தெந்த மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா காரணமாக எந்தெந்த மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட கொரோனா தீவிரமாக, வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுக்க 1657 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் 50 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமாக 124 பேருக்கு கொரோனா உள்ளது. இதில் 117 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 6 பேர் குணமடைந்து விட்டனர். மதுரையை சேர்ந்த ஒருவர் பலியாகிவிட்டார்.

சென்னையில் எத்தனை பேருக்கு
தமிழகத்தில் அதிகமாக சென்னையில்தான் பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 28 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் திருநெல்வேலியில் 23 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் 19 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

சேலத்தின் நிலை
சேலத்தில் 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. மதுரையில் 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு ஒருவர் பலியாகிவிட்டார். கன்னியாகுமரியில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் ஐந்து பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. விழுப்புரத்தில் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. வேலூரில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்கள் எப்படி
விருதுநகரில் ஒருவருக்கு கொரோனா உள்ளது. திருவண்ணாமலையில் ஒருவருக்கு கொரோனா உள்ளது. திருப்பூரில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. திருச்சியில் ஒருவருக்கு கொரோனா உள்ளது. தூத்துக்குடியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் மற்றும் டெல்டா நிலை
தஞ்சாவூரில் ஒருவருக்கு கொரோனா உள்ளது. கரூரில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா உள்ளது. செங்கல்பட்டில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. நேற்று கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் திருநெல்வேலிதான்.நேற்று ஒரே நாளில் அங்கு மட்டும் அதிகமாக 22 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications