ஊரடங்கு.. வீட்டில் உள்ள சுட்டீஸ் வைரல் ஆக வேண்டுமா?.. ஒன்இந்தியா தரும் செம வாய்ப்பு.. #KidsAreCool!
உங்கள் குழந்தைகளை உடனே புகைப்படம் எடுத்து ஒன்இந்தியா தமிழின் மெயில் ஐடிக்கு அனுப்புங்கள்.
சென்னை: உங்கள் குழந்தைகளை உடனே புகைப்படம் எடுத்து ஒன்இந்தியா தமிழின் மெயில் ஐடிக்கு அனுப்புங்கள். ஊரடங்கால் வீட்டில் நேரம் செலவழித்து வரும் உங்கள் குழந்தைகளின் புகைப்படங்கள் அனைத்தும் எங்கள் சமூக வலைதள பக்கங்களில் #KidsAreCool என்ற டேக்குடன் பிரசுரிக்கப்படும்.
கொரோனா காரணமாக உலகமே முடங்கி உள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டு உள்ளது. இதனால் யாரும் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

முக்கியமாக வீட்டில் இருக்கும் சுட்டீஸ் எங்கும் வெளியே செல்ல முடிவதில்லை. பள்ளி கூடங்கள் இல்லை. வெளியே சென்று விளையாடவும் வாய்ப்பு இல்லை. இதனால் சுட்டீஸ்களை சமாளிக்க முடியாமல் பெற்றோர்களும் கஷ்டப்படும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
உங்களுக்காகவே தற்போது ஒன்இந்தியா ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இது உங்கள் வீட்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தும். அதே சமயம் பிஸியாகவும் வைத்து இருக்கும். உங்கள் குழந்தைகளை உடனே நல்ல புகைப்படம் எடுத்து ஒன்இந்தியா தமிழின் மெயில் ஐடிக்கு அனுப்புங்கள். உங்கள் குழந்தைகளே அவர்களாக செல்பி எடுத்து எங்களுக்கு அனுப்பினாலும் டபுள் ஓகேதான்!
அதோடு வீட்டில் ஊரடங்கு காலத்தில் உங்கள் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள், எப்படி நேரத்தை செலவு செய்கிறார்கள் என்பதையும் கடிதம் போல அவர்களையே எழுத சொல்லி எங்களுக்கு அனுப்புங்கள். அவர்களை கைபட எழுத சொல்லி அதை எங்களுக்கு, பெயர் மற்றும் முகவரியுடன், மெயிலில் அனுப்புங்கள். அது கதையாக இருக்கலாம், கவிதையாக இருக்கலாம், ஓவியமாக கூட இருக்கலாம்.
நல்ல.. முத்து முத்தான கடிதங்கள், புகைப்படங்கள் அனைத்தும் எங்கள் சமூக வலைதள பக்கங்களில் #KidsAreCool என்ற டேக்குடன் பிரசுரிக்கப்படும். இன்னும் ஏன் லேட் பண்ணுறீங்க, உடனே கிளிக் பண்ணுங்க.. ஊரடங்கு நேரத்திலும் வைரல் ஆகுங்க!
புகைப்படங்கள் மற்றும் கடிதங்களை அனுப்ப வேண்டிய மெயில் ஐடி: [email protected]












Click it and Unblock the Notifications