சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரான்சில் பெரும் உச்சம்.. அமெரிக்காவில் ரெக்கார்ட்.. வாட்டி எடுக்கும் ஓமிக்ரான்.. என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

சென்னை: உலகம் முழுக்க நேற்று கொரோனா பரவல் உச்சம் தொட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் மிக அதிக அளவில் கொரோனா கேஸ்கள் உலகம் முழுக்க பதிவாகி இருக்கிறது. ஓமிக்ரான் கொரோனா பரவி வரும் நிலையில், அதன் காரணமாக நேற்று அதிக கேஸ்கள் பதிவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நேற்று ஒரே நாளில் உலகம் முழுக்க 739,996 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 276,560,934 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 7,066 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 'வார் ரூம்கள்' தேவை.. 3 மடங்கு வேகமாக பரவும் ஓமிக்ரான்.. மீண்டும் ஊரடங்கு? மத்திய அரசு பரபர கடிதம் 'வார் ரூம்கள்' தேவை.. 3 மடங்கு வேகமாக பரவும் ஓமிக்ரான்.. மீண்டும் ஊரடங்கு? மத்திய அரசு பரபர கடிதம்

5,384,572 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலி ஆகியுள்ளனர். தற்போது கிட்டத்தட்ட 90 நாடுகளில் ஓமிக்ரான் தீவிரமாக பரவி வருகிறது. முக்கியமாக பிரான்ஸ், யு.கே, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஓமிக்ரான் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 பிரான்ஸ்

பிரான்ஸ்

ஓமிக்ரான் பரவி வரும் பிரான்சில் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பிரான்சில் 8,713,756 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 72,832 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 121,946 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 229 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,603,397 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 988,413 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 178,888 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ஓமிக்ரான் பரவலால் அமெரிக்காவில் தினசரி கொரோனா கேஸ்கள் உச்சம் தொட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 52,249,823 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 830,976 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1979 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 40,791,721 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 10,627,126 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் இதுவரை 200க்கும் அதிகமான நபர்களுக்கு ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதுவரை 34,758,078 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 5914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 478,061 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,195,060 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 84,957 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டனில் 11,542,143 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 90,743 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 147,433 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 172 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 9,873,098 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,521,612 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யாவில் 10,267,719 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 25907 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 299,249 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1079 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 9,055,199 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 913,271 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

English summary
Coronavirus; Omicron variant cases increase in USA, UK, France and other nations around the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X