சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ் : தனிமையால் கொல்லும் மன அழுத்தம் - பாதிப்புகள் பரிகாரங்கள்

கொரோனா வைரஸ் தாக்கிய கொடுமையை விட தனிமை கொடுமைதான் கொல்லும். யாருடனும் சகஜமாக பழக முடியாது. 14 நாட்கள் தனித்திருப்பதும் நோய் உறுதி செய்யப்பட்ட பின்னர் சிகிச்சைக்காக மிகவும் தனிமைப்படுத்தப்படுவதால் ஒர

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் கொடூர தாக்குதலால் சமூக விலகல் இன்றைக்கு அவசியமாகி விட்டது. தனித்திருங்கள் என்று அரசு அறிவுறுத்தினால் அதை யாரும் கேட்டது போல தெரியவில்லை. தனிமை கொடுமை பலரையும் கொன்று விடும் வேறு வழியில்லை நோய் பரவாமல் தடுக்க தனித்திருப்பது அவசியம். தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு ஒருவித மன அழுத்தம் ஏற்படுகிறது. 14 நாட்கள் கண்காணிப்பில் இருப்பதோடு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட உடன் சிகிச்சைக்காக தனிமைப்படுவது அதைவிட கொடுமை. இதனால் ஒருவித மன அழுத்தமும் இருக்கமும் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தமே டெல்லியில் ஒருவரை தற்கொலை செய்ய தூண்டியுள்ளது. தனிமை மன அழுத்ததத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று மன நல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சந்தேகத்திற்கு உரியவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. பேருந்துகளில் பயணிப்பது, கூட்டமான இடங்களில் பயணிப்பது உள்ளிட்ட எந்த ஒரு செயலையும் எக்காரணம் கொண்டு செய்யக்கூடாது.
முதலில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் ஒரே வீட்டில் உள்ளவர். அவருடன் கழிவறை, குளியல் அறை, ஒரே படுக்கை அறை, உணவு அறை உள்ளிட்டவற்றை பயன்படுத்துபவர்கள். அடுத்தததாக கொரானாவால் பாதிக்கப்பட்டவரை தொட்டவர். அவருடன் நெருக்கமாக நின்று பேசியவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு கொரோனா அறிகுறி உறுதியாகிவிட்டால் அனைவரும் கட்டாயமாக 14 நாட்கள் தள்ளியே இருக்க வேண்டும். தனி கழிப்பறைடன் நன்கு காற்றோட்டமான ஒற்றை அறையில் தங்க வேண்டும். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீட்டுக்குள் நோயுற்ற நபர்கள் ஆகியோரிடமிருந்து விலகி இருக்க வேண்டும். முக கவசம் அணிந்திருக்க வேண்டும். அதை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை எரித்து விட வேண்டும்.

தனிமை தனிமை

தனிமை தனிமை

வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட காலம் என்பது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொண்டவர் என்பதை உறுதி செய்ததில் இருந்து 14 நாட்கள் இருக்கவேண்டும். அல்லது குறிப்பிட்ட நபருக்கு ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் இல்லை என்பது தெரியும் வரை தனிமையில் இருக்க வேண்டும். தனிமையிலே இனிமை காண முடியுமா என்று கேட்கலாம். நமது குடும்பமும் தெருவும், கிராமமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் இந்த தனிமையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

தனியாக இஐங்களள்

தனியாக இஐங்களள்

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அல்லது தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அடிக்கடி கையை சோப்பு மற்றும் தண்ணீரில் அல்லது ஆல்கஹால் சார்ந்த கையால் அடிக்கடி கழுவ வேண்டும். வீட்டில் அனைவரும் பயன்படுத்தும் பொருட்களைப் பகிர்வதை தவிர்க்க வேண்டும். தனியாக இருப்பவர்களுடன் உணவுகள், சாப்பிடும் பாத்திரங்கள், துண்டுகள், படுக்கை அல்லது பிற பொருட்களை வீட்டில் உள்ளவர்களுடன் எக்காரணம் கொண்டும் பகிரக் கூடாது.அதே நேரத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்க மனதிற்கு பிடித்த இசையை கேட்கலாம் புத்தகம் படிக்கலாம்.

மன அழுத்த பாதிப்பு

மன அழுத்த பாதிப்பு

ஒருவரின் பாரம்பரிய வாழ்க்கை முறை வாழ்வியல் பிரச்சினைகளை மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மனிதன் ஒரு சமூக விலங்கு. வீட்டிலும் வெளி இடங்களிலும் கூட்டமாகவே இருந்து பழகி விட்டனர். திடீரென தனித்திரு என்று ஒருவரை ஒதுக்கி வைப்பதால் அவருக்கு மன அழுத்தம் அதிகமாகி விடும். உறங்குவது, சாப்பிடுவது வேலை செய்வதில் ஒருவித மாற்றங்களை ஏற்படுத்தும். கோபம், தூக்க கலக்கம், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இது கடந்த காலங்களில் சார்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கும் இருந்தது தெரிய வந்துள்ளது.

மன ஆரோக்கியம் அவசியம்

மன ஆரோக்கியம் அவசியம்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களை நோய்கள் தாக்காது அதே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் உளவியல் ரீதியாகவும் தெம்பாக இருக்க வேண்டியது அவசியம். இந்த தனிமை ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்கவும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். வைட்டமின் சி உணவுகளை சாப்பிடுங்கள். எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ், சாப்பிடலாம். தியானம் யோகா செய்யலாம், மூச்சுப்பயிற்சி செய்யுங்கள் மன அழுத்தம் குறையும். நல்ல இசையை கேட்பதன் மூலமும் புத்தகம் படிப்பதன் மூலமும் மன அழுத்தத்தை குறைக்கலாம்.

சந்திரன்

சந்திரன்

ஒருவரின் மன நிலையை தீர்மானிக்கும் கிரகம் சந்திர பகவான். ஒரு ஜாதக அமைப்பில் சந்திரன் நல்ல நிலையில் அமரும்பொழுது , ஜாதகரின் மன நிலை மிகவும் சிறப்பாக அமைந்து விடுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் மறைவு ஸ்தானங்களில் நிற்க்கும்பொழுது மனநிலை பாதிப்புகள் ஏற்படுகின்றது. வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு தன்மை அதிக பலம் உள்ளது. மறைவு ஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை ஏற்படும்.

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம்

ஒருவருடைய மன நிலை மற்றும் புத்திசாலிதனம், ஆழ்மனதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை குறிக்கும் பாவம் பூர்வ புண்ணியம் எனப்படும் ஐந்தாம் பாவம் ஆகும். ஐந்தாம் பாவம் கெடாமல் இருப்பது நல்ல மனநிலைக்கு முக்கியமானதாகும். ஐந்தாம் வீட்டில் அசுப தொடர்புகள் ஏற்படும்போது அது மனதினை பாதிக்கின்றது. ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி பலமாக நிற்பது, காலபுருஷனுக்கு லக்னமாகிய மேஷத்தில் அசுப கிரஹங்கள் தொடர்பு இன்றி இருப்பது, அதன் அதிபதி செவ்வாய் பலமாக இருப்பது, ஆத்ம காரகனாகிய சூரியன் அசுபத்தன்மை இன்றி நல்ல நிலையில் பலம் பெற்று இருப்பது ஆகியவை ஜாதகரை மன நோயில் இருந்து காக்கும் அம்சங்களாகும். குல தெய்வத்தையும், முன்னோர்களையும் மனதளவில் நினைத்து வழிபடுங்கள். ராகு கேது வழிபாடும் நன்மை செய்யும் மன அழுத்தம் போக்கும்.

English summary
Psychology experts share their tips for safeguarding your mental health during quarantine. Here I have discussed some small simple remedies relief from Coronavirus Quarantine depression that we can practice and take care of ourselves.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X