சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பு.. ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் சென்னையில் மரணம்

சென்னையை சேர்ந்த ராஜ் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையை சேர்ந்த ராஜ் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நேற்று 3645 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதுவரை 74622 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று மட்டும் 46 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக 957 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Coronavirus: Raj TV Videographers dies due to infection in Chennai

இந்த நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தற்போது ஊடக துறையினர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். முன்களத்தில் நின்று செய்திகளை வழங்கி வரும் ஊடகத்துறையினரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சென்னையில் இப்படி பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், சென்னையை சேர்ந்த ராஜ் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 கோடியை நெருங்குகிறது.. கோர தாண்டவம் ஆடும் கொரோனா.. உலகம் முழுக்க 9,898,083 பேர் பாதிப்பு! 1 கோடியை நெருங்குகிறது.. கோர தாண்டவம் ஆடும் கொரோனா.. உலகம் முழுக்க 9,898,083 பேர் பாதிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஊடக துறையில் இருந்து மரணம் அடையும் முதல் பத்திரிகையாளர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 40 வயதுதான். 40 வயதிலேயே அவர் கொரோனா காரணமாக மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

கொரோனா தொற்றால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    கொரோனா முகாமில் இளைஞர்களின் TikTok வீடியோ

    இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கலில் " மூத்த ஒளிப்பதிவாளர் ராஜ் டிவி வேல்முருகன் கொரோனாவால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்! முன்கள வீரர்களாகப் பணியாற்றும் ஊடகத் துறையினர் தங்களின் பாதுகாப்பிலும் கவனம் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டு உள்ளார்.

    துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள இரங்கலில் "கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் திரு.வேல்முருகன் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ள இரங்கலில் "மக்கள்தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி ஆகியவற்றில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த வேல்முருகன் கொரோனா வைரஸ் தாக்குதலால் இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

    English summary
    Coronavirus: Raj TV Videographers dies due to infection in Chennai today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X