சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரடங்கு தளர்வு.. தமிழகம், கர்நாடகாவில் தொழிற்சாலைகள் நாளை முதல் இயங்குமா? நிலை என்ன?

கொரோனா காரணமாக இன்று நள்ளிரவில் சில மாவட்டங்களில் நாடு முழுக்க ஊரடங்கு தளர்த்தப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தொழிற்சாலைகள் இயங்குமா என்று நாளைதான் முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா காரணமாக இன்று நள்ளிரவில் சில மாவட்டங்களில் நாடு முழுக்க ஊரடங்கு தளர்த்தப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தொழிற்சாலைகள் இயங்குமா என்று நாளைதான் முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    லாக்டவுன் தளர்வு பகுதியில் எவையெல்லாம் இயங்கும்?

    கொரோனா காரணமாக நாடு முழுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் நாளை முதல் ஊரடங்கு தளர்வு கொண்டு வரப்பட உள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் மட்டும் தளர்த்தப்பட உள்ளது.

    Coronavirus: Tamilnadu and Karnataka havent decided anything on lifting lockdown on factories

    இந்த ஊரடங்கு தளர்வு இன்று இரவில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. ரெட் லிஸ்டில் இல்லாத பகுதிகளில் இந்த ஊரடங்கு தளர்வு நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு கொண்டு வரப்பட்டாலும் தமிழகத்தில் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்குமா என்று நாளைதான் முடிவு எடுக்கப்படும் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதற்கான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இதற்காக வல்லுனர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது . அந்த குழு இது தொடர்பான ஆராய்ச்சி செய்துள்ளது. நாளை இந்த குழு அறிக்கையை சமர்ப்பிக்கும்.

    கடுமையாகும் விதிகள்.. தெலுங்கானாவில் மே 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் கேசிஆர் அதிரடி!கடுமையாகும் விதிகள்.. தெலுங்கானாவில் மே 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் கேசிஆர் அதிரடி!

    அந்த அறிக்கையை பொறுத்து தமிழ்கத்தில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படுமா என்று முடிவுகள் எடுக்கப்படும். அதுவரை இப்போது இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் கர்நாடகாவில் தொழிற்சாலைகள் இயங்குவது தொடார்பாக செவ்வாய் கிழமைதான் அறிவிப்பு வெளியாகும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    Coronavirus: Tamilnadu and Karnataka havent decided anything on lifting lockdown on factories

    முதலில் கர்நாடகாவில் பைக் ஓட்ட தடை உள்ளிட்ட முக்கிய கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் அது திரும்ப பெறப்பட்டு, ஏப்ரல் 21ம் தேதி இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். அதுவரை கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவித்துள்ளது. தொழிற்சாலைகள் இயங்குமா என்பது குறித்தும் அப்போதுதான் முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் அசோக் லேலாண்ட், ஹூண்டாய், டொயோட்டா உள்ளிட்ட முக்கியமான தொழிற்சாலை நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு காரணமாக இங்கு உற்பத்தி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus: Tamilnadu and Karnataka haven't decided anything on lifting lockdown on factories in their states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X