இதுவரை இல்லாத மோசமான ரெக்கார்ட்.. தமிழகத்தில் ஒரே நாளில் 817 கொரோனா கேஸ்கள்.. கைமீறி செல்கிறது!
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 817 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 18545 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் வரும் கேஸ்களின் எண்ணிக்கை 700ஐ விட அதிகமாக இருக்கிறது. நேற்று முதல் நாள் தமிழகத்தில் 805 கேஸ்கள் ஏற்பட்டது.
அதன்பின் நேற்று 624 கேஸ்கள்தான் தமிழகத்தில் வந்தது. நேற்று குறைவான சோதனைகள் செய்யப்பட்டதால் குறைவாக கேஸ்கள் வந்தது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மீண்டும் கேஸ்கள் அதிகமாக வந்து இருக்கிறது .

இன்று கேஸ்கள் எத்தனை
இன்று தமிழகத்தில் மேலும் 817 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 18545 ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலும் இன்று அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது. சென்னையில் மேலும் 558 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12198 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது.

நிலை என்ன
தமிழகத்தில் இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 8500 ஆக உள்ளது. இன்று மட்டும் 139 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்ததால் தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 567 பேர் இன்று தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை மொத்தம் 9909 பேர் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பலி எண்ணிக்கை
தமிழகத்தில் இன்று 6 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்து அதிகமாக திருவள்ளூரில் 40 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 825 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது.திருவண்ணாமலையில் 13 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 253 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு நிலை
செங்கல்பட்டில் இன்று மொத்தம் 31 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 888 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 14 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 330 பேருக்கு மொத்தமாக கொரோனா உள்ளது. இதனால் தற்போது தமிழகம் முழுக்க கொரோனா பாதிப்பு பரவ தொடங்கி உள்ளது . எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications