சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பாதிப்பு.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. 26 ஆக உயர்வு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில், மேலும் புதிதாக ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், தமிழகத்தில் இந்த வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை என்பது 23 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று அடுத்தடுத்து 3 ட்வீட்டுகள் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

Coronavirus update today: 5 news cases of COVID19 in Tamilnadu

மார்ச் 25-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 276 விமான பயணிகளை சோதித்துப் பார்த்துள்ளோம். இதில் 15 ஆயிரத்து 492 பேர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

மருத்துவமனையில் இருப்பவர் எண்ணிக்கை 211. மொத்தம் 890 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அதில் 757 பேருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது பாதிப்பு இருப்பதாக 26 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், ஒருவர், ஏற்கனவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

புதிதாக, தமிழகத்தில், 8 கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேர் இந்தோனேசியாவை சேர்ந்த பிரஜைகள். மற்றொருவர், அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்தவர். அவர்கள் அனைவரும் சேலம் மருத்துவ கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கடந்த 22ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் மூன்று கொரோனா ஏற்ப்பட்டுள்ளது. ஒருவருக்கு 63 வயது, துபாயில் இருந்து வந்த ஆண். இன்னொருவர் 18 வயது இளைஞர். டெல்லியில் இருந்து சென்னை வந்த கொரோனா நோயாளி மூலம் இவருக்கு கொரோனா பரவி உள்ளது. மூன்றாவது நபர் 66 வயது ஆன். இவர் சென்னையில் தாய்லாந்து இளைஞர் உடன் தொடர்பு கொண்டார். இவர்கள் மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Coronavirus update today: 8 news cases of COVID19 in Tamilnadu

இதில் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் அந்த சுற்றுலா பயணிகள் எங்கெல்லாம் சுற்றுலா சென்றார்களோ அங்கெல்லாம் அவர்கள் பழகியவர்களிடமும் இந்த நோய் பரவி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் அதுகுறித்து கணக்கெடுக்கும் பணியை ஏற்கனவே சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் தீவிர சோதனை நடந்து வருகிறது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமாகத்தான் அந்த டிராவல் கைடுக்கு கொரோனா பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம் சென்னையை சேர்ந்த ஒரு நோயாளிக்கு, சமூக பரவல் மூலமாக, வியாதி பரவியிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

எனவே பொதுமக்கள் தங்களைத் தாங்களே தக்காத்துக்கொள்ளவேண்டும், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை மிகவும் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்கள்.

தனிமைப்படுத்துதல் ஒன்றே இந்த விஷயத்தில் நம்மைக் காக்கும்.

English summary
5 news cases of COVID19 in TN. 4 Indonesian nationals & their travel guide from Chennai test positive at Salem Medical College. Quarantined since 22.3.20.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X