இது கொஞ்சம் வித்தியாசமானது.. அதுதான் பிரச்சனையே.. சென்னையில் 2வது நபருக்கு கொரோனா..பகீர் சந்தேகங்கள்

சென்னையில் இரண்டாவதாக ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இரண்டாவதாக ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது நிறைய சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Corona Update: தமிழகத்தில் 2-வதாக மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

    உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பெரிய அளவில் பரவி வருகிறது. உலகம் முழுக்க கொரோனா காரணமாக 219,240 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை உலகம் முழுக்க 8,967 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்தியாவில் மொத்தம் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. நேற்றுதான் தமிழகத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தமிழகம் எப்படி

    தமிழகம் எப்படி

    டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். இவருக்கு வைரஸ் சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்யப்பட்டது. இதில்தான் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது இவர் சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்ச்சை பெற்று வருகிறார். இவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஏன் வித்தியாசம்

    ஏன் வித்தியாசம்

    இவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது கொஞ்சம் வித்தியாசமானதாக பார்க்கப்படுகிறது. இந்த டெல்லி நபர் வெளிநாடு செல்லவில்லை. வெளிநாட்டு நபர்கள் யாரையும் சந்திக்கவில்லை. ஆனாலும் இவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. வெளிநாடு செல்லாமல். உறவினர்கள் யாருக்கும் கொரோனால் இல்லாமலே இவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இது community transmission வகை கொரோனாவாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். கொரோனா மொத்தம் இரண்டு வகையில் பரவும்.

    முதல் வகை

    முதல் வகை

    முதல் வகை என்பது ஆங்கிலத்தில் local transmission என்று அழைப்பார்கள். அதன்படி கொரோனா பாதித்த நபர் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்து, அவரின் உறவினர்களுக்கு இதே வைரஸை பரப்பி விட்டால் அது local transmission. அதாவது உறவினர்கள், நெருக்கமானவர்கள் மட்டும் இதனால் பாதிக்கப்படுவார்கள். இதை எளிதாக கண்டுபிடிக்க முடியும். உறவினர்கள் எல்லோரையும் சோதனை செய்ய முடியும்.

    அடுத்த வகை

    அடுத்த வகை

    அடுத்த வகை பரவல்தான் community transmission. இந்த வகைதான் கொஞ்சம் மோசமானது. அதாவது வெளிநாட்டில் இருந்து வைரஸ் பாதிப்போடு வந்த நபர் ஒருவர் மூலம் கொஞ்சமும் தொடர்பே இல்லாத வேறு ஒருவர் நபருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்படுவது. உதாரணமாக, சீனாவில் இருந்து டெல்லிக்கு வரும் நபர் ஒருவருக்கு கொரோனா இருக்கிறது. அவர் சாலையில் லேசாக மோதிய அல்லது சில நொடிகள் பேசிய ஒரு நபருக்கும் கொரோனா பரவினால் அதுதான் community transmission.

    மக்கள் எப்படி

    மக்கள் எப்படி

    இப்படி சாலையில் பார்ப்பவர்கள், ஹோட்டல், கடைகளில் பார்ப்பவர்களுக்கு கொரோனா பரவினால் அதை கண்டுபிடிப்பது கடினம். உறவினர்கள் என்றால் டிராக் செய்யலாம். ஆனால் இப்படி தெரியாத நபர்கள் என்றால் கண்டுபிடிப்பது மிக கடினம். இப்போது சென்னையில் வைரஸ் வந்து இருக்கும் நபர் வெளிநாடு செல்லவில்லை. அவரின் உறவினர்களுக்கு வைரஸ் தாக்குதல் இல்லை.

    அதனால் என்ன

    அதனால் என்ன

    அதனால் இவர் வைரஸ் தாக்கிய யாரையாவது சாலையில் சந்தித்து இருக்கலாம், லேசாக உரசி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதை இன்னும் community transmission என்று உறுதி செய்யவில்லை. இதேபோல் நிறைய கேஸ்கள் வந்தால் அதை community transmission என்று கூறுவார்கள். அப்படி உறுதி செய்யப்பட்டால் இந்தியா மொத்தமும் லாக் டவுன் செய்யப்பட வாய்ப்புள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+