சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அச்சமூட்டும் டாஸ்மாக் கிளஸ்டர்.. குடிமகன்கள் மூலம் தமிழகத்தில் கொரோனா பரவியதா? உண்மை பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

தமிழகத்தில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் திறக்கப்பட்டதால் யாருக்கு எல்லாம் கொரோனா கேஸ்கள் ஏற்பட்டது என்பது இன்றில் இருந்து பெரும்பாலும் தெரிய வரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Recommended Video

    Will Tasmac emerge as the next cluster of cases in Tamilnadu?

    சென்னை: தமிழகத்தில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் திறக்கப்பட்டதால் யாருக்கு எல்லாம் கொரோனா கேஸ்கள் ஏற்பட்டது என்பது இன்றில் இருந்து பெரும்பாலும் தெரிய வரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது.

    14 நாள் தனிமை.. நாடு முழுக்க ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்த புது விதிகள்.. தமிழகத்தில் என்ன நிலை?14 நாள் தனிமை.. நாடு முழுக்க ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்த புது விதிகள்.. தமிழகத்தில் என்ன நிலை?

    டாஸ்மாக் காரணம் இல்லை

    டாஸ்மாக் காரணம் இல்லை

    தமிழகத்தில் தற்போது வரை ஏற்படும் கேஸ்கள் எதற்கும் டாஸ்மாக் காரணம் இல்லை என்று கூறுகிறார்கள். அதாவது டாஸ்மாக் மூலம் தமிழகத்தில் இப்போது வரைய ஒரே ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா ஏற்பட்டுள்ளது . தேனியில் டாஸ்மாக் சென்ற ஒரு நபருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டள்ளது. வேறு யாருக்கும் தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் கொரோனா ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் உண்மை என்ன

    ஆனால் உண்மை என்ன

    அதேபோல் ஏற்கனவே கொரோனா இருந்த நபர்கள் யாராவது டாஸ்மாக் சென்றார்களா என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பான விவரங்கள் எதுவும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் வெளியிடப்படவில்லை. கொரோனா பாதிப்போடு யாராவது டாஸ்மாக் சென்று இருந்தால், அந்த நபர்கள் மூலம் தமிழகத்தில் இன்னும் பலருக்கு கொரோனா பரவி இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இதுவரை அப்படி டாஸ்மாக் சோர்ஸ் கேஸ்கள் எதுவும் பதிவாகவில்லை.

    டாஸ்மாக் கேஸ்கள் வரும்

    டாஸ்மாக் கேஸ்கள் வரும்

    இப்படி டாஸ்மாக் கேஸ்கள் பதிவாகாதது ஒரு வகையில் நல்லதுதான். ஆனால் தமிழகத்தில் இனிமேல் டாஸ்மாக் மூலம் கொரோனா கேஸ்கள் வரும் என்கிறார்கள். பொதுவாக ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் 5-7 நாட்களில் அறிகுறி ஏற்படுகிறது. அதாவது கொரோனா தாக்கிய ஒரு வாரத்தில் அவர்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வருகிறது. கோயம்பேட்டில் காய்கறி விற்ற பலருக்கு ஒரு வாரம் கழித்துதான் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இனிமேல் வரலாம்

    இனிமேல் வரலாம்

    தமிழகத்தில் கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. அதன்பின் சென்னை ஹைகோர்ட் உத்தரவு காரணமாக டாஸ்மாக் மூடப்பட்டது. இந்த இரண்டு நாட்கள் டாஸ்மாக்களில் மக்கள் அதிக அளவில் கூடினார்கள். அங்கு சமூக இடைவெளி பெரிய அளவில் கடைபிடிக்கப்படவில்லை. தமிழக அரசு கடுமையாக முயன்றும் கூட சரியாக சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை . இதனால் கொரோனா அதிகரிக்கும் வாய்ப்பு உண்டாகி உள்ளது.

    இனி கொரோனா வரும்

    இனி கொரோனா வரும்

    சரியாக டாஸ்மாக் சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அதனால் இன்றில் இருந்து தமிழகத்தில் டாஸ்மாக் கேஸ்கள் வர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இன்றில் இருந்து டாஸ்மாக் மூலம் தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா வந்தது என்று தெரிய வரும். இன்றில் இருந்து கொரோனாவோடு டாஸ்மாக் சென்றவர்கள் அல்லது டாஸ்மாக் சென்று கொரோனா பெற்றவர்கள் யார் என்று தெரிய வரும் என்கிறார்கள்.

    இரண்டு கிளஸ்டர்

    இரண்டு கிளஸ்டர்

    தமிழகத்தில் இதுவரை அதிகாரபூர்வமாக இரண்டு கிளஸ்டர் பரவல் ஏற்பட்டுள்ளது. ஒன்று டெல்லி மாநாடு மூலம் ஏற்பட்ட கிளஸ்டர் பரவல். இன்னொன்று கோயம்பேடு மார்க்கெட் மூலம் ஏற்பட்ட கிளஸ்டர் பரவல். இனி வரும் நாட்களில் டாஸ்மாக் மூலம் கிளஸ்டர் பரவல் ஏற்பட்டதா என்று தெரிய வரும். டெஸ்ட்கள் அதிகரிக்க அதிகரிக்க இது தொடர்பான விவரங்கள் வெளியாகும்.

    English summary
    Coronavirus: Will Tasmac emerge as the next cluster of cases in Tamilnadu?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X