"எண்ட்கேம்".. ஓமிக்ரான் பரவலோடு Corona Pandemic முடிவிற்கு வருகிறதா? நிபுணர்கள் சொல்லும் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓமிக்ரான் பரவலோடு கொரோனா பெருந்தொற்று முடிந்துவிடும் என்று பலர் இணையத்தில் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர். இதுதான் கடைசி வீரியமான உருமாறிய கொரோனாவாக இருக்கும்.. இதற்கு மேல் அலைகள் ஏற்பட வாய்ப்பு குறைவு என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் ஓமிக்ரான் மூலம் கொரோனா பரவல் முடிவிற்கு வருமா.. இந்த பெருந்தொற்று இத்துடன் டாட்டா காட்டிவிட்டு மறைந்து போக வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி சர்வதேச மருத்துவ வல்லுனர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எந்த ஒரு பெருந்தொற்றும் கண்டிப்பாக ஒரு கட்டத்திற்கு பின் உச்சத்தை எட்டி முடிவிற்கு வரும். பிளேக், ஃப்ளூ தொடங்கி எல்லா பெருந்தொற்றும் இப்படி முடிவிற்கு வந்துள்ளது. அப்படிதான் கண்டிப்பாக கொரோனா பரவலும் முடிவிற்கு வரும். ஆனால் ஓமிக்ரான் இப்போது வேகமாக பரவி வரும் நிலையில்.. உண்மையில் கொரோனா பரவல் எப்போது முடிவிற்கு வரும் என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.

அதிலும் சில நிபுணர்களோ கொரோனாவோடு வாழ பழகிக்கொள்ளுங்கள்.. அது எங்கேயும் போகாது என்று கூறி அச்சம் எழுப்பி உள்ளனர். கொரோனா இங்கேயே இருக்கும். மக்கள் அதற்கு ஏற்றபடி வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன.

 கருத்து

கருத்து

இந்த நிலையில் இந்த பேண்டமிக் முடிவிற்கு வருமா வராதா என்று சர்வதேச மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரபல யேல் மருத்துவ கல்லூரி தலைமை மருத்துவர் டாக்டர் ஆல்பர்ட் கோ அளித்த பேட்டியில், இந்த புதிய வகை உருமாறிய கொரோனாவான ஓமிக்ரான் நமக்கு எல்லாம் ஒரு எச்சரிக்கை மணி. இதேபோல் புதிய வகை கொரோனா தோன்றும் வாய்ப்பு உள்ளது. அதற்கு முன் நாம் சித்தரிக்க வேண்டும்.

கொரோனா பேண்டமிக்

கொரோனா பேண்டமிக்

நாம் கொரோனாவை மொத்தமாக ஒழிக்க முடியாது. எனவே புதிய வகை கொரோனா தோன்றாமல் மட்டும் பார்த்துக்கொள்ள வேண்டும். பல நாடுகளில் கொரோனா பரவல் முடிவிற்கு வந்தாலும் உலகில் ஏதாவது ஒரு நாட்டில் கொரோனா இருந்து கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு நாட்டில் கொரோனா அலைகள் தோன்றிக்கொண்டேதான் இருக்கும்.

ஓமிக்ரான் பேண்டமிக்

ஓமிக்ரான் பேண்டமிக்

முக்கியமான ஏழ்மையான நாடுகளில் கொரோனா பரவிக்கொண்டே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் மூத்த மருத்துவர் ஸ்டிபன் கிஸ்லர் அளித்த பேட்டியில், கொரோனா என்பது எண்டமிக் நிலையை எட்டும். அதாவது கொரோனா உலகம் முழுக்க இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இப்போது இருக்கும் அதே வீரியத்தோடு இருக்காது.

கொரோனா எண்டமிக்

கொரோனா எண்டமிக்

ஃப்ளு காய்ச்சல் இப்படித்தான் பேண்டமிக் என்ற நிலையில் இருந்து எண்டமிக் ஆனது. அதேபோல் கொரோனா ஆகும் நாள் வரும். ஆனால் அது எப்போது வரும் என்று சொல்ல முடியாது. அதாவது கொரோனா பரவினாலும் அதனால் உலக நாடுகள் லாக்டவுன் போடாத, மக்கள் கொத்து கொத்தாக பாதிப்பு அடையாத சூழ்நிலை விரைவில் வரும் என்று அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

எண்டமிக் எப்படி?

எண்டமிக் எப்படி?

பிரபல ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ மையத்தின் ஆய்வாளர் அமேஷ் அடல்ஜா, நாம் நல்ல நிலையை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறோம். ஓமிக்ரான் பரவினாலும் மீண்டும் 2019, 2020ல் இருந்த நிலைக்கு திரும்ப மாட்டோம். அதே சமயம் ஜான் ஜாப்கின்ஸ் மருத்துவ மையத்தின் இன்னொரு மருத்துவர், வில்லியம் மோஸ் நம்பிக்கை அளிக்கும் செய்தியை குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கை

நம்பிக்கை

அதில், புதிதாக கொரோனா வகைகள் தோன்றும் என்று நான் நினைக்கவில்லை. இனி வரும் நாட்களில் கொரோனா லேசான காய்ச்சல் மற்றும் லேசான சளியை ஏற்படுத்தும். சிலருக்கு மட்டும் கொஞ்சம் தீவிரமான பாதிப்புகள் இருக்கலாம். மற்றபடி மொத்தமாக பலரை பாதிக்கும் என்ற நிலையை நாம் கடந்துவிட்டோம்.

Recommended Video

    இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளது - மா சுப்பிரமணியன்
    கொரோனா உருமாற்றம்

    கொரோனா உருமாற்றம்

    உலகம் முழுக்க லாக்டவுன் போடும் நிலை இருக்காது. இது சீசன் நோய் போல மாறும். கொரோனாவில் ஆங்காங்கே உருமாற்றம் இருக்கும். ஆனால் ஆதிக்கம் செலுத்த கூடிய உருமாற்றங்கள் இருக்காது. அவ்வப்போது பூஸ்டர்கள் போட வேண்டிய நிலை மட்டும் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+