தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்க... 1 கோடி தடுப்பூசி அனுப்புங்கள் - ஸ்டாலின்
தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: தமிழகத்திற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு சரியான அளவில் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்றும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்த முதலில் பலரும் ஆர்வம் காட்டவில்லை. கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஜூலை மாதத்திற்கான தொகுப்பில் 71 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவரையில் 20 லட்சத்துக்கும் குறைவான தடுப்பூசிகளே வந்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் தடுப்பூசி செலுத்துவதில் தடை ஏற்படுகிறது.
நாளொன்றுக்கு 2 லட்சம் தடுப்பூசி தேவைப்படுவதாக குறிப்பிட்டிருக்கும் சுகாதாரத்துறை, மத்திய அரசிடம் இருந்து குறைவான தடுப்பூசிகளே கிடைப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்துக்கு சிறப்பு ஒதுக்கீடாக கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசி வழங்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்திற்கு மிகக் குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.
தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு சரியான அளவில் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications