சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமானது தமிழகம்... இந்தியாவில் 3வது இடம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் மோசமாக பாதிக்கப்பட்ட 3வது மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திற்கு அடுத்த இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் இதுவரை இல்லாத பெரிய அளவாக ஞாயிற்றுக்கிழமை 509 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இது ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையிலான புதிய தொற்றுநோய்களின் சமீபத்திய வேகத்தில் புதிய உச்சை பிரதிபலிக்கிறது

மாநிலத்தின் மொத்த கொரோனா நோயாளிகளி எண்ணிக்கை 7,000 த்தை தாண்டியது. தமிழ்நாட்டில் 669 புதிய கேஸ்களில் 76 சதவீதம் சென்னையில் இருந்து வந்துள்ளது, இதன் மூலம் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்துக்குப் பிறகு 7,000 த்தை தாண்டிய மூன்றாவது மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது.

பயணிகள் ரயில் சேவை நாளை மறுநாள் ஆரம்பம்.. பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள முக்கிய கட்டுப்பாடுகள்பயணிகள் ரயில் சேவை நாளை மறுநாள் ஆரம்பம்.. பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள முக்கிய கட்டுப்பாடுகள்

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 669 பேரில் 412 ஆண்கள், 257 பெண்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம், இதுவரை 7,204 பேர் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயது மற்றும் 59 வயது நபர்கள் இருவரும் சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். மேலும் அருகிலுள்ள செங்கல்பேட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 74 வயதான ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

 1,959 பேர் இதுவரை குணம்

1,959 பேர் இதுவரை குணம்

மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 135 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நோயை சமாளித்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,959 என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஹாட்ஸ்பாட்களில் ஒன்றாக உருவாகி உள்ள சென்னையில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 3,839 ஐத் தொட்டது. தமிழகத்தின் பாதிக்கும் மேற்பட்ட கொரோனா நோய் தொற்றுக்கு சென்னை காரணம் ஆகும்.

கோயம்படு காரணம்

கோயம்படு காரணம்

தமிழ்நாடு முழுவதும் ஈரோடு, கோவை உள்பட பல மாவட்டங்களில் ஆரம்ப நிலையில் ஜெட் வேட் வேகத்தில் கொரோனா தொற்று பரவிய போதும், படிப்படியாக குறைந்து நல்ல நிலைக்கு வந்தன. ஆனால் சென்னை சிவப்பு மண்டலத்திலேயே தொடர்ந்து உள்ளது. நகரத்தில் கொரோனா தொற்று விரைவாக அதிகரிப்பதற்கு பெரும்பாலும் கோயம்பேடு சந்தை காரணம் ஆகும்.

1589 பேருக்கு கொரோனா

1589 பேருக்கு கொரோனா

கோயம்பேடு சந்தை ஒரு கொரோனா வைரஸ் கிளஸ்டராக மாறும் முதல் அறிகுறிகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் வெளிவந்தன, ஆனால் மே 4 அன்றுதான் சந்தை மூடப்பட்டது. அதுவரை, நெரிசலான பகுதியில் ஏராளமான சிறு கடைகள் தொடர்ந்து இயங்கின, சமூக தூரத்தை சிறிதும் பின்பற்றவில்லை. தொழிலாளர்கள் மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கு சென்றுவிட்டார்கள். இதனால் தொடர்புத் தடமறிதல் கடினமாக உள்ளது. கோயம்பேடு சந்தையால் கொத்து கொத்ததாக சென்னையில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இதேபோல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கொத்துக்கொத்தாக கொரோனா பரவியது வெள்ளிக்கிழமை நிலவரப்படி 1589 பேர் கோயம்பேடு கிளஸ்டருடன் தொடர்புடையவர்கள் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்த எண்ணிக்கை சனி ஞாயிறுகளில் பெரிய அளவில் உயர்ந்து இருக்கும்.

தமிழகம் முதலிடம்

தமிழகம் முதலிடம்

இதற்கிடையே மகாராஷ்டிரா உட்பட வேறு எந்த மாநிலத்தையும் விட அதிக மாதிரிகள் தமிழகம் சோதனை செய்ததும் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகளுக்கு காரணம். தமிழகம் சனிக்கிழமை நிலவரப்படி 2,16,416 மாதிரிகளை பரிசோதித்து இருந்தது அவற்றில் பெரும்பாலான சோதனை சென்னையில் நடத்தப்பட்டது. மாவட்ட வாரியாக சோதனைகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. சென்னை மாநகராட்சி மே 1 அன்று ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 5225 பேரை பரிசோதித்து வருவதாகக் கூறியிருந்தது.

English summary
Covid-19 Cases as Tamil Nadu Becomes Third Worst-hit State. Chennai Records Biggest Daily Increase With 509
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X