குட் நியூஸ்..தமிழ்நாட்டில் சற்று குறைந்த கொரோனா.. ஆனால் இந்த 5 மாவட்டடங்களில் மட்டும் அதிக பாதிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா அதிகரித்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக குறைந்துள்ளது. தினசரி பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கொரோனா சற்று குறைவு
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. தமிழ்நாட்டில் கடந்த நாட்களாக கொரோனா அதிவேகமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,6669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட குறைவாகும்.

உயிரிழப்பும் குறைவு
கொரோனா மொத்த பாதிப்பு 26,42,030 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 3 பேர் இறந்துள்ளனர். திருப்பூர், கோவையில் தலா 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 35,288 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,565 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,89,899 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து குறைவாக இருக்கிறது.

சென்னையில் குறைவு
16,843 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,56,282 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,40,86,709 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 196 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்த நிலையில் இன்றும் குறைந்து ஆறுதல் அளிக்கிறது. அதே வேளையில் உயிரிழப்பில் முதலிடத்தில் உள்ளது. கோவையிலும் கொரோனா சற்று குறைந்துள்ளது. ஆனால் முதலிடத்தில் இருக்கிறது.

செங்கல்பட்டு
கோவையில் 205 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 115 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 33 பேருக்கும், மதுரையில் 20 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 25 பேருக்கும், திருவள்ளூரில் 57 பேருக்கும், திருச்சியில் 49 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 97 பேருக்கும், விருதுநகரில் 10 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும், சேலத்தில் 63 பேருக்கும், நாமக்கல்லில் 72 பேருக்கும், தஞ்சாவூரில் 110 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களில் சதம்
சென்னை, கோவை, செங்கல்பட்டு மற்றும் ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. தஞ்சாவூரில் பாதிப்பு வேகமாக உயருகிறது. சென்னை புறநகர் மாவட்டங்களை பொறுத்தவரை செங்கல்பட்டில் மட்டும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications