சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டிலேயே அதிக கொரோனா தடுப்பூசி.. மகாராஷ்டிரா முதலிடம், உ.பி, குஜராத் அடுத்தடுத்த இடம்

Google Oneindia Tamil News

டெல்லி: கோவிட் -19 க்கு எதிராக இந்தியாவில் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 36 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூன் 5, காலை 7 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 36,50,080 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதில், 33,74,640 பேர் முதல் டோஸையும், 2,75,440 பேர் இரண்டாவது டோஸையும் பெற்றனர்.

Covid-19 vaccination : India vaccinated over 36 lakh people in a day

நாடு முழுவதும் 18,19,52,338 பேர் முதல் டோஸ் பெற்றுள்ளனர். இரண்டாவது டோசும் சேர்த்து பெற்றவர்கள் எண்ணிக்கை 4,59,07,979 ஆகும். இந்த இரண்டையும் சேர்த்து இதுவரை நாடு முழுவதும் 22,78,60,317 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிக அளவாக 1,89,40,778 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் 1,62,42,637, ராஜஸ்தான் 1,42,88,985. டோஸ்கள் என அடுத்தடுத்து உள்ளன.

இரண்டாவது டோஸ் செலுத்தியவர்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது, இதுவரையில் 47,27,545 இரண்டாவது டோஸ் மகாராஷ்டிராவில் வழங்கப்பட்டுள்ளது. குஜராத் 42,61,375 டோஸ்களுடன் இரண்டாவது இடத்திலும்,, மேற்கு வங்கம் 39,30,952 டோஸ்கள் செலுத்தி 3வது இடத்திலும் உள்ளது

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிகபட்சமாக இரண்டு டோசும் சேர்த்து இதுவரை 2,36,68,323 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது உத்தரபிரதேசம் 1,98,38,197 டோஸ்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. குஜராத் 1,79,24,919 டோஸ்களுடன் 3வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 2.86 கோடிக்கும் அதிகமாக உள்ளது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 80,745 குறைந்து 15,55,248 ஆக உள்ளது, தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 1,97,894 அதிகரித்ததால் மொத்த எண்ணிக்கை 2,67,95,549 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,380 பேர் கொரோனாவால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 3,44,082 ஆக உயர்ந்துள்ளது

English summary
India vaccinated over 36 lakh people against Covid-19 on Friday, according to the official data from the Ministry of Health and Family Welfare. Maharashtra has administered the highest number of total doses administered with 2,36,68,323 doses, followed by Uttar Pradesh at 1,98,38,197 and Gujarat at 1,79,24,919.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X