இந்தியாவில் கொரோனா பாதிப்பை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகம் - 248 பேர் மரணம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 23,070 பேர் குணமடைந்துள்ளனர். 248 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஒரே நாளில் 23,070 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதும் தொற்றுப் பாதிப்பு குறைவதற்கு காரணமாக இருக்கிறது. தற்போது 3வது அலை வந்தால் அதனை எதிர் கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 19,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,39,35,309 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று 21,257, நேற்று முன்தினம் 22,431 ஆக பதிவானது இதனால், தொற்று வித்தியாசம் நேற்றைய பாதிப்புகளை விட ஆயிரம் பேருக்கு மேல் குறைவாக காணப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 79 லட்சத்து 12 ஆயிரத்து 202 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இதனால், மொத்த தடுப்பூசி எண்ணிக்கை 94 கோடியாக உயர்ந்து உள்ளது என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 23,070 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,32,48,291 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 248 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,50,375 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் நாடு முழுவதும் 2,36, 643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று 2,40,221 பேராக இருந்தது. கடந்த 206 நாட்களில் இது மிக குறைவாகும்.
இந்தியாவில் இதுவரை 93,99,15,323 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 79,12,202 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்த தடுப்பூசி எண்ணிக்கை 94 கோடியாக உயர்ந்து உள்ளது என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications