சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காசி தமிழ் சங்கமம்.. பிளானே இதான்! ‘உடனே தடுத்து நிறுத்துங்க’ - தமிழக அரசுக்கு சிபிஐஎம் கோரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை : ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஆள்பிடிக்கும் நோக்கத்துடனே, காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றும் உண்மையில் அது கலாச்சாரம், இதர நல்லெண்ண நிகழ்வுகளுக்காக அல்ல என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

இந்த வகுப்புவாத நோக்கிலான நிகழ்வுகளை தடுத்து நிறுத்த கல்வித்துறையும், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு துறையும், தமிழ்நாடு அரசும் உரிய தலையீடு செய்து தடுத்து நிறுத்த வேண்டும் என சிபிஐஎம் கேட்டுக்கொண்டுள்ளது.

காசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ராமேஸ்வரம் - வாரணாசி ரயிலில் கூடுதல் பெட்டிகளுடன் ராமேஸ்வரத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயணிகளுடன் ரயில் வாரணாசிக்கு புறப்பட்டது. தொடர்ந்து 12 ரயில்களில் குழுவினர் புறப்பட உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு செல்லும் ரயிலை ஆளுநர் ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தனர். பாஜக தீவிரமாக ஈடுபட்டு வரும் இதில், தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், இது ஆர்.எஸ்.எஸ், ஊடுருவலுக்கான வேலை என மார்க்சிஸ் கட்சி விமர்சித்துள்ளது.

காசி தமிழ் சங்கமம்- சங்கிகளின் சங்கமம் என கடும் விமர்சனம்! நவ.18-ல் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி! காசி தமிழ் சங்கமம்- சங்கிகளின் சங்கமம் என கடும் விமர்சனம்! நவ.18-ல் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம்

சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக, பாஜக அரசு செயல்படுத்தி வரும் காசி தமிழ் சங்கமம், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆள் பிடிக்கும் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

 காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம்

இதுதொடர்பான தீர்மானத்தில் இந்திய மொழிகள் குழு மற்றும் ஒன்றிய அரசாங்க கல்வி அமைச்சகத்தின் சார்பில் நவம்பர் 16 முதல் டிசம்பர் 19-ந்தேதி வரையில், காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. அறிவுசார் மற்றும் கலாசாரத்தின் இரண்டு வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாடு - காசி ஆகிய இரு மையங்களின் வாயிலாக இந்திய நாகரிகத்திலுள்ள ஒற்றுமையை அறிந்துகொள்ள இந்த சங்கமம் ஒரு ஏதுவான தளமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "தமிழர்களின் பாரம்பரியத்தை உலகறிய செய்வதற்கு காசி தமிழ் சங்கமம்" என்று நிகழ்ச்சி அமைப்பாளர் சாமுகிருஷ்ண சாஸ்திரி கூறியுள்ளார்.

தமிழ்நாடு - காசி

தமிழ்நாடு - காசி

மாணவர்கள், கைவினை, இலக்கியம், ஆன்மிகம், வர்த்தகம், ஆசிரியர்கள், பாரம்பரியம், தொழில்முனைவோர், தொழில்கள், கோவில்கள், கிராமப்புறம், கலாசாரம் என்று 12 பிரிவுகளிலிருந்து, ஒவ்வொரு பிரிவில் இருந்தும் ஒவ்வொரு நாள் என்று, ரெயில்களில் மொத்தம் 2,500 பேர் ராமேசுவரம், கோவை, சென்னை ஆகிய இடங்களிலிருந்து அழைத்து செல்லப்படுகிறார்கள். முதல் ரயில் ராமேஸ்வரத்திலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு நவம்பர் 16 அன்று புறப்பட்டுள்ளது. இவர்கள் தளங்களை சுற்றிப்பார்த்துவிட்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடக்கும் கருத்தரங்குகளில் கலந்துவிட்டு, அங்குள்ள கண்காட்சியையும் பார்வையிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல்

ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் மிக முக்கிய கல்வி நிலையங்களில் உள்ள மாணவர் மத்தியில், ஊடுருவும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டியில், கடந்த சில நாள்களுக்கு முன், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநில உயர்கல்வித்துறை அல்லது தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை விவாதிக்கப் படவில்லை. மாநில அரசின் எந்த ஒரு பங்களிப்பும் இருப்பதாக தெரியவில்லை. மாநில அரசும் இத்தகைய நிகழ்ச்சி மீது எந்த ஒரு கருத்தும் வெளியிடாதது ஆச்சர்யமாக உள்ளது.

 ஆள்பிடிக்கும் திட்டம்

ஆள்பிடிக்கும் திட்டம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஆள்பிடிக்கும் நோக்குடன் நடைபெறும் இந்த காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி உண்மையில் கலாச்சாரம், இதர நல்லெண்ண நிகழ்வுகளுக்காக அல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இந்த வகுப்புவாத நோக்கிலான நிகழ்வுகளை தடுத்து நிறுத்த கல்வித்துறையும், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு துறையும், தமிழ்நாடு அரசும் உரிய தலையீடு செய்து தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல் இதர ஜனநாயக சக்திகளும் இந்த நிகழ்ச்சி மூலமான பாதிப்பை உணர்ந்து, தடுத்து நிறுத்தும் வகையில் செயலாற்ற சிபிஐ (எம்) மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது என அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆளுநரை திரும்பப் பெற தீர்மானம்

ஆளுநரை திரும்பப் பெற தீர்மானம்

மேலும், பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களின் அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் ஆளுநர்கள் மூலமாக தலையீடு செய்வதும், சர்ச்சைகளை உருவாக்குவதும் மோடி அரசின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல. தமிழக ஆளுநர் ரவி அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டும், அவருடைய பொறுப்புக்கு ஒவ்வாத வகையிலும், அத்துமீறியும் தொடர்ந்து பேசி வருகிறார். பல்வேறு முக்கிய பிரச்சனைகளில் தமிழகத்தின் நிலைப்பாட்டை மறுதலித்து ஒன்றிய அரசின் குரலாக ஒலித்து வருகிறார். எனவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரும் தமிழக எம்.பி.க்களின் மனுவின் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐஎம் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Marxist Communist Party has insisted that the event called Kashi Tamil Sangamam which is held with the aim of attracting people to RSS organization, Tamil Nadu government should intervene to stop RSS infiltrating educational institutions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X