அடுத்த ஆபரேசனுக்கு ரெடியான விஜய்! இன்னும் 4 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்! சிடிஆர் சொன்ன முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னும் நான்கு ஐந்து மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் எப்ப வேண்டுமானாலும் வரலாம் எனவும்,
உள்ளாட்சித் தேர்தலிலும் 100% மக்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு வாக்களிப்பார்கள் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியுள்ளார். மேலும், இனி திமுக அதிமுக யாரும் கிடையாது, தமிழக வெற்றிக் கழகம் மட்டும் தான் நிரந்தரம் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மதுரை ஜீவா நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்டம் வழங்கும் விழா அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் நிர்மல் குமார் பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

CTR Nirmal Kumar

நிகழ்ச்சியில் பேசிய அவர்," மதுரையில் முன்னாள் அமைச்சர் மூர்த்தியை பதவியில் இருந்த போது நீங்கள் பார்த்துள்ளீர்களா? அவர் பெயரை மட்டும் தான் தெரியும். அவரை எல்லாம் பார்க்க முடியாது. மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்களது எண்ணமெல்லாம் சொத்து சேர்ப்பது மற்றும் கொள்ளையடிப்பது மட்டும்தான்.

சிடிஆர் நிர்மல் குமார்

மதுரை மாநகராட்சிக்கு ஒரு முறையான பாதாள சாக்கடை வசதிகள் கூட ஏற்படுத்தி தரவில்லை. மதுரை மாநகராட்சி மேயர், அவரது கணவர், கவுன்சிலர்கள் 400 500 கோடி மதுரை மாநகராட்சியில் கொள்ளையடித்துள்ளனர். மதுரை மாநகராட்சியில் உள்ள திமுக மாமன்ற உறுப்பினர்கள் குறைந்தது 10 லிருந்து 15 கோடி கொள்ளை அடித்து உள்ளார்கள். திமுக மாமன்ற உறுப்பினர்கள் உங்களது உண்மையான சொத்து பட்டியலை தைரியம் இருந்தால் காட்ட முடியுமா? கேட்டு நான்கு மாதம் ஆகிறது தைரியம் இருந்தால் உங்களது சொத்து பட்டியலை காட்டுங்கள்.

தமிழக வெற்றிக் கழகம்

இரண்டு கட்சிகளின் கோட்டையாக இருந்த மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் 8 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளீர்கள் அதை நிச்சயம் நிறைவேற்றுவோம். நான்கு மாதத்தில் பல்வேறு திட்டங்களை மதுரைக்கு நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். குறிப்பாக பல ஆண்டு கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டத்திற்கு 2000 கோடி முதல் சட்டப்பேரவிலே முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

அதிமுக

அதிமுகவின் கோட்டையாக இருந்த இரண்டு தொகுதிகளிலும் நீங்கள் பெருவாரியாக வாக்களித்து தமிழக வெற்றி கழகத்தை வெற்றி பெற வைத்துள்ளீர்கள். நான்கு ஐந்து மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். உள்ளாட்சித் தேர்தலிலும் 100% நீங்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு வாக்களிப்பீர்கள். இனி திமுக அதிமுக யாரும் கிடையாது. இன்று அதிமுக என்ன நிலையில் இருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவும் அதே நிலையில் இருக்கும்.

திமுக

இனி வரும் காலங்களில் திமுகவும் கிடையாது, அதிமுகவும் கிடையாது, வேறு யாரும் கிடையாது.
முதல்வர் விஜயின் நல்லாட்சி மட்டுமே தொடரும். திமுக இரண்டாம் இடம் கிடைத்ததே மிகப்பெரிய வெற்றியாக எடுத்துக் கொண்டுள்ளார் ஸ்டாலின். இரண்டாம் இடம் கிடைத்தது வெற்றி என ஸ்டாலின் கூறி வருகிறார். தவெக பற்றி பேசமாட்டேன் என்று கூறிய ஸ்டாலின் தற்போது இரண்டாம் இடம் கிடைத்தது வெற்றி என பேசுகிறார். அவர் எந்த நிலைக்கு சென்று விட்டார் பாருங்கள்.

முக ஸ்டாலின்

ஸ்டாலினுக்கு இருக்கும் ஒரே எண்ணமெல்லாம் தனது குடும்ப சொத்துக்களை காப்பாற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதே நிலைப்பாட்டில் தற்போது எடப்பாடியும் உள்ளார். புரட்சித்தலைவர் ஆரம்பித்த கட்சியை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டார், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் தொடர்ந்து செயல்படுத்துவார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+