அடிச்சு உடைக்க சொன்னார் ஓபிஎஸ்.. "ஜெயலலிதா அறையை எட்டி உதைத்து" - புது குண்டு போட்ட ஈபிஎஸ் டீம்!
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், 'அதை உடையுங்கள்' என ஓ.பன்னீர்செல்வம் சொல்லி, அதனை உடைத்து அவரது ஆதரவாளர்கள் உள்ளே சென்றனர் என சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
எந்த வாகனத்தில் ஓ.பி.எஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்தாரோ அதே வாகனத்தில், அலுவலகத்தினுள்ளே இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்றார் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் காணாமல் போன ஆவணங்கள், பொருட்கள் தொடர்பாக போலீசில் ஓபிஎஸ் மீது கொள்ளை புகார் அளித்துள்ளது ஈபிஎஸ் தரப்பு.

அதிமுக வன்முறை
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்த மோதலையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஈபிஎஸ் தரப்பிடம் அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது.

பொருட்கள் கொள்ளை
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் பொருட்கள், ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி இன்று சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், கட்சி தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அசல் பத்திரங்கள்
கோவை, திருச்சி, புதுச்சேரி அதிமுக அலுவலகங்களின் அசல் பத்திரங்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 31 ஆயிரம் ரொக்கப்பணம், 2 கணினிகள், வெள்ளி வேல், முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசம் வைக்கப்பட்டிருக்கும் வங்கியின் கணக்குப் புத்தகம், கட்சிக்கு வாங்கப்பட்ட 37 வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ்கள், அதிமுக - பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை அசல் பத்திரம், அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் என பல்வேறு ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக சி.வி.சண்முகம் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

உடைக்கச் சொன்னார் ஓபிஎஸ்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகம், "ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில் அ.தி.மு.க.விலிருந்து முன்பே நீக்கப்பட்டு, அ.தி.மு.கவுக்கு சம்மந்தமே இல்லாதவரான புகழேந்தி உட்பட 300 பேர் கொண்ட ரவுடிகள், குண்டர்கள், சமூக விரோதிகள் ஆகியோர் கையில் கத்தி, கடப்பாறை, தடிகள், கற்களோடு வந்தனர். தலைமை அலுவலகத்தின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், அதனை உடையுங்கள் என ஓ.பன்னீர் செல்வம் சொல்லி, அதனை உடைத்து அவரின் ஆதரவாளர்களுடன் உள்ளே சென்றுள்ளார். இது அனைவருக்கும் தெரியும். எல்லா தொலைக்காட்சியிலும் காட்டினார்கள்.

அத்துமீறல்
அதிமுகவில் ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணிகள் இடையேயான பிரச்சனையின் போது கூட அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்ட போதிலும், யாரும் கட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழையவில்லை. ஆனால் இன்று அ.தி.மு.க.வில் பெரும்பான்மையையும், தொண்டர்களிடத்தில் நன்மதிப்பையும் இழந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும், அவர்கள் தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அலுவலகத்திற்கு சீல் வைக்க காரணமாக இருந்துள்ளனர்.

காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு
கட்சி அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், விலை மதிப்புமிக்க பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் வந்த வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டன. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக போலீசில் ஏற்கனவே மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜெயக்குமார் முன்பே பாதுகாப்பு கோரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு, இந்த நடவடிக்கையை திமுக அரசு செய்துள்ளது.

இந்தியாவில் எங்குமே
காவல்துறையின் பாதுகாப்போடு அந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 32 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆண்ட அ.தி.மு.கவின் தலைமை அலுவலகம் திமுக அரசால் சீல் வைக்கப்பட்டது. இந்தியாவிலேயே எந்தக் கட்சியிலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது இல்லை. ஜெயலலிதா தன்னை முதல்வராக்கினார் என்று சொல்லிக்கொள்ளும் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் அறையை எட்டி உதைத்து, உள்ளே சென்று, அங்கு ஜெயலலிதாவின் இருக்கையில் அமர்ந்து, அங்கிருந்த பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். தன்னை அதிமுக தொண்டன் என்று சொல்லிக்கொள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகுதி இல்லை.
Recommended Video

அசல் பத்திரங்கள்
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், அதிமுகவுக்கு சொந்தமாக மதுரை, கோவை, திருச்சி, புதுச்சேரியில் உள்ள சொத்துகளின் பத்திரங்கள் என்று அனைத்தையும் ஓ.பன்னீர்செல்வம் திருடிச் சென்றதோடு வன்முறையில் ஈடுபட்டுள்ளார்." எனத் தெரிவித்தார்.

ஐ.நா சபைக்கு கூட எழுதுவார்
மேலும், அதிமுகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சி.வி.சண்முகம், "அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனை வங்கிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் ஐ.நா சபைக்குக் கூட கடிதம் எழுதுவார்" எனத் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications