சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Cyclone Amphan: வங்கக் கடலில் உருவானது புயல்.. சென்னைக்கு தென் கிழக்கே 670 கி.மீ தொலைவில் 'ஆம்பன்'

Google Oneindia Tamil News

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு வலுப்பெற்று, புயலாக மாறியது. இதற்கு ஆம்பன் (cyclone amphan) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் உச்சரிப்பு உம்பன் (umpun) அல்லது உம்ஃபுன் என்றும் தமிழில் அழைக்கப்படுகிறது.

Recommended Video

    Amphan cyclone : Warning for Tamilnadu | Rain Update

    இந்த புயல் 17ம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, 18ம் தேதி, வடகிழக்கு திசையில் நகரும் வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில், சூறாவளி காற்று 75 முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதிகபட்சமாக, 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    இந்த புயல் தமிழகத்தில் கரையை கடக்காது. ஏனெனில் இது, வடக்கு மற்றும் வட கிழக்கு திசையை நோக்கி பயணிக்கும்.

    ஆம்பன் புயல் எதிரொலி.. புதுச்சேரியில் கடல் சீற்றம்.. புயல் எச்சரிக்கைக் கூண்டுஆம்பன் புயல் எதிரொலி.. புதுச்சேரியில் கடல் சீற்றம்.. புயல் எச்சரிக்கைக் கூண்டு

    20ம் தேதி கரையை கடக்கும்

    20ம் தேதி கரையை கடக்கும்

    ஆம்பன் புயல் வரும் 20ம் தேதி மேற்குவங்கம் மற்றும் ஒடிசா அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்திற்கு மழை இருக்காது. மாறாக, வெப்ப சலனம் காரணமாக வெயில் மேலும் அதிகரிக்கும். மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    அரபிக் கடல் காற்று

    அரபிக் கடல் காற்று

    அரபிக் கடலில் உள்ள காற்றின் ஈரப்பதத்தை இந்த புயல் இழுக்கும் காரணத்தால், கேரளா மற்றும் கர்நாடகாவில் கடலோரப் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதேபோல ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்தமானிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    புயலாக உருவானது

    புயலாக உருவானது

    இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று கூறியதாவது, தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயலாக உருப்பெற்று, சென்னைக்கு தென் கிழக்கே 670 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. வடமேற்கு திசையில் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. எனவே, தமிழக கடலோர பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

    ஒடிசா கோரிக்கை

    ஒடிசா கோரிக்கை

    ஒடிசா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புலம் பெயர் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் ரயில்களை, தங்கள் மாநில கடற்கரையோம் வழியான வழித்தடத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயக்க வேண்டாம் என்று ஒடிசா, அரசு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

    தாய்லாந்து சூட்டிய பெயர்

    இந்த புயலுக்கு ஆம்பன் என்று தாய்லாந்து நாடு பெயர் சூட்டியுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயலுக்கு தெற்காசிய நாடுகள் பெயர் சூட்டும் நடைமுறையின் ஒரு அம்சமாக தாய்லாந்து இந்த முறை புயலுக்கு பெயர் சூட்டுகிறது.

    English summary
    Cyclone "AMPHAN" formed over SE Bay of Bengal. It's official statement from IMD!
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X