அப்பாடா.. வலு குறைந்தது மாண்டஸ் புயல்.. கரையை கடக்கும் போது வீறு கொண்டு தாக்குமா, புஸ் ஆகுமா?
சென்னை: வங்கக் கடலில் நிலவிய மாண்டஸ் தீவிர புயல், வலுவிழந்து புயலாக மாறியுள்ளது. இந்நிலையில், மேற்கு வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தவிர்த்து சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணமாலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி,விழுப்புரம் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் பாதிப்பு எப்படி இருக்கும்? வர்தா, தானே போல புரட்டிபோடுமா? வெதர் எக்ஸ்பர்ட்ஸ் விளக்கம்!
இதனிடையே வங்கக் கடலில் தீவிர புயலாக நிலவிய மாண்டஸ் தற்போது வலுவிழந்து புயலாக மாறியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது மாண்டஸ் புயல் சென்னைக்கு தென் கிழக்கே 260 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது மணிக்கு 12 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது.
மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவில் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் அப்போது மணிக்கு 85கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலை நிவர் புயலோடு வானிலை ஆய்வாளர்கள் ஒப்பிடுகின்றனர். புயலானது வீறு கொண்டு தாக்குமா? அல்லது அமைதியாக கரையை கடக்குமா என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.