மாண்டஸ் புயல்- சென்னையில் விடிய விடிய மழை- மாமல்லபுரத்தில் 10 அடி உயரத்தில் சீறும் கடல் அலைகள்
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. மாமல்லபுரத்தில் 10 அடி உயரத்தில் கடல் அலைகள் சீறின.
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் தற்போது சென்னை தென்கிழக்கில் மையம் கொண்டிருக்கிறது. இந்த புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. மாமல்லபுரம், மரக்காணம் மற்றும் புதுச்சேரியிலும் மழை பெய்து வருகிறது. சென்னை மாமல்லபுரத்தில் 10 அடி உயரத்தில் கடல் அலைகள் சீறின. சென்னையில் மழை நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மாண்டஸ் புயல் கரையை கடப்பதால் 27 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விட்டு விட்டு வீசும் காற்று.. விடாமல் பெய்யும் மழை! கரையை கடக்கும் மாண்டஸ்! 24 மாவட்டங்களுக்கு லீவ்
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழகம், காவிரி டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்கிறது வானிலை மையம்.