உருவாகும் புயல்..17 மாவட்டங்களில் மழை..உங்க ஊர் இருக்கா செக் பண்ணுங்க வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுப்பெற்று, இன்று மாலை புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல்
டிசம்பர் 8 ஆம் தேதி காலை வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்க கடலை அடைய வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி, மாண்டஸ் புயலானது நகர வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை உருவாகவுள்ள மாண்டஸ் புயலானது புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையில் கரையை கடக்கும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வெளுத்து வாங்கப்போகும் மழை
டிசம்பர் 8 ஆம் தேதி தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் தென் கடலோர ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகளில் கன முதல் மிக கனமழையுடன் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். டிசம்பர் 9 அன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் மற்றும் வட கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல, தெற்கு கடலோர ஆந்திராவை ஒட்டிய பகுதியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சூறாவளி வீசும்
அந்தமான் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து நாளைய தினம் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 08.12.2022 அன்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் கவனம்
தமிழக- புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வட இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் 08.12.2022 அன்று காலை தொடங்கி காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 08.12.2022 மாலை முதல் 09.12.2022 மாலை வரை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், 09.12.2022 மாலை முதல் 10.12.2022 காலை வரை மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் வேகத்தில் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 10.12.2022 மாலை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications