நள்ளிரவு முதல் கரையைக் கடக்கும் மாண்டஸ்..புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது இதற்குத்தான்!
சென்னை: மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ள நிலையில் நாகை, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் ஆர்ப்பரிக்கிறது. கடலில் புயல் உருவாகும் போது மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். இந்த புயல் கூண்டுகளில் ஏற்றப்படும் எண்களுக்கு என்ன அர்த்தம் என்று பார்க்கலாம்.
மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் புயல் எச்சரிக்கையால் இதுவரை 7 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. காற்று, மழையின் வேகம் பொறுத்தும் மேலும் சில விமானங்கள் ரத்தாக வாய்ப்பு உள்ளது.

புயல் எச்சரிக்கை
மாண்டஸ் பயுலானது தென் கிழக்கே 320 கி.மீ., காரைக்காலில் இருந்து கிழக்கு தென் கிழக்கே 240 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த மாண்டஸ் தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு புயல் கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது 65 - 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது. நாகை, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் சின்னங்கள்
புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றுவார்கள். இந்த எச்சரிக்கைச் சின்னங்கள் ஒன்றில் துவங்கி 11 வரை உள்ளது. புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் மற்றும் மழைக் காலங்களில் விடுக்கப்படும் புயல் எச்சரிக்கை சின்னங்களுக்காக விளக்கங்களை பார்க்கலாம்.

காற்றோடு கனமழை
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் பொருள். இரண்டாம் எண் கூண்டு, புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கண்டால் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும். 3ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பெய்யும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள். நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்பதை குறிக்கும்.

5ஆம் எண் புயல் எண்
ஐந்தாம் எண் கூண்டு, புயல் உருவாகி இருப்பதை குறிக்கிறது. அதோடு துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். ஆறாம் எண் புயல் கூண்டு ஏற்றினால் புயல் வலதுபக்கமாக கரையைக் கடக்கும் போது, துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படுத்தப்படும் என்பதை குறிப்பதாகும்.

கரையைக் கடக்கும் புயல்
ஏழாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். எட்டாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், மிகுந்த அபாயம் என்று பொருள். அதாவது புயல், தீவிர புயலாகவோ, அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து, துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம்.

அபாயம்
ஒன்பதாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். 10ஆம் எண் கூண்டு ஏற்றப்படுமானால், அதி தீவிர புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அருகே கடந்து செல்லும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று எச்சரிக்கப்படுகிறது. துறைமுகத்தில் கடைசியாக ஏற்றப்படும் 11ஆம் எண் கூண்டு தான் உச்சபட்சமானது. இது எதற்கு ஏற்றப்படுகிறது என்றால் வானிலை மையத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications