தமிழ்நாட்டில்தான் பால், நெய் விலை குறைவு.. எதிர்க்கட்சிகள் புரிஞ்சுக்கோங்க! அமைச்சர் நாசர் விளக்கம்!
சென்னை : ஆவினில் நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டாலும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பால் உற்பத்தி பொருட்கள் குறைவான விலையில் விற்கப்படுகிறது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
நிதிச் சுமையால் தான் ஆவின் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பதை, எதிர்க்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஆவின் பால், நெய், வெண்ணெய் விலையை ஆவின் நிறுவனம் அதிகரித்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் அமைச்சர் நாசர் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

ஆவின் தயாரிப்புகள்
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், பால், தயிர், மோர், நெய், வெண்ணெய், பால்கோவா, மைசூர் பாக்கு, குலாப் ஜாமுன், ரசகுல்லா உள்ளிட்ட 235 வகையான பால் உப பொருட்களை தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் பால் விலையை மாற்றி அமைத்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தின் பிரிமியம் நெய் லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு ரூபாய் 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது.

தொடர் விலை அதிகரிப்பு
இதன் மூலம் கடந்த 9 மாதங்களில் மட்டும் ஆவின் நெய் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டது. நெய் மற்றும் பால் விலையேற்றத்திற்கு பொது மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்திருந்த நிலையில் ஆவின் வெண்ணெய் விலையும் நேற்று அதிகரிக்கப்பட்டது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு கலக்காத வெண்ணெய் 500 கிராம், ரூ. 250 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன் விலை ரூ. 260 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் தயாரிப்புகள் தொடர்ச்சியாக விலை உயர்த்தப்பட்டு வருவதைக் கண்டித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இனி ஏழைகள் பயன்படுத்த முடியாது
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான ஆவின் பொருட்களை பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். பால் மற்றும் பால் பொருட்கள் மூலம் எளிய மக்கள் தங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பெற்று வந்த நிலையில், அதனையும் அவர்களுக்கு கிடைக்க விடாமல் திமுக அரசு தடுத்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இந்த விலை உயர்வின் மூலம் ஏழை எளிய மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், நெய், வெண்ணெய் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் தின்பண்டங்களின் விலையும் அதிகரிக்கும். மொத்தத்தில், பொதுமக்களை வாட்டி வதைக்கின்ற அரசாக திமுக அரசு விளங்கி வருகிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார். தனியார் பால் நிறுவனம் பயன்பெறும் வகையில், ஆவின் விலையை உயர்த்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இங்கு தான் குறைவு
இந்நிலையில், ஆவின் தயாரிப்புகளின் விலை உயர்வு பற்றி தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், "ஆவினில் நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டாலும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பால் உற்பத்தி பொருட்கள் குறைவான விலையில் விற்கப்படுகிறது. நிதிச் சுமையால் தான் விலையேற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை, எதிர்க்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications