தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட ஆசையா? தமிழகம் முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் - முழு விபரம்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறையால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த நாட்களில், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயப்பட உள்ளதாக தமிழக அரசு போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

ஆம்னி பேருந்துகள்
சொந்த ஊர் செல்பவர்கள் ஏற்கனவே ரயில், ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி 16888 சிறப்பு பேருந்துகள்
தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் எவ்வளவு சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தலைமை செயலகத்தில் துறை அதிகாரிகளுடன் போக்குவரத்து துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் மொத்தம் 16888 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிறப்பு பேருந்து நிலையங்கள்
சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளும், சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வர 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து திருவிழா நாட்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க, ஆண்டுதோறும் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளிக்கு ரிசர்வேசன்
அரசு போக்குவரத்து கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம். இது தவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications