Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்னி பேருந்துகள்.. இப்படியுமா நடக்கும்? இது கட்டண கொள்ளை.. இதுதான் தீர்வு! குமுறும் பயணிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 80 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் பார்த்தால் வெளிப்படையாகவே தெரியும். 740 ரூபாய் அளவிற்கு இருக்கும் கட்டணம் தற்போது 1500 அளவில் உள்ளது. 1000 ரூபாயில் செல்லக்கூடிய பேருந்துகள் 2ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன.

சென்னையில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோரின் பூர்வீகம் தென்மாவட்டங்கள் மற்றும் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்கள் ஆகும். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு அவர்கள் சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம்.

சொந்தமாக கார் வைத்துள்ளவர்கள் காரில் சென்றுவிடுவார்கள். இதேபோல் வசதி அதிகம் உள்ளவர்கள் விமானத்திலோ அல்லது எவ்வளவு கட்டணம் என்றாலும் ஆம்னி பேருந்துகளில் சென்று விடுவார்கள் .

ரயில் கட்டணம்

ரயில் கட்டணம்

ஆனால் சாமானியர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அதிகம் விரும்புவது ரயில்தான். ஆனால் தீபாவளி டிக்கெட் முன்பதிவு என்பது வெறும் ஐந்து நிமிடத்தில் முடிந்துவிடுகிறது. அதனால் ரயிலில் இடம் கிடைக்காதவர்கள், ஆம்னி பேருந்துகளை அதிகம் நாடுகிறார்கள். இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு வழக்கம்போல் பெரும்பாலான ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைவிட 60 முதல் 80 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

கட்டணம் கிடுகிடு

கட்டணம் கிடுகிடு


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி தான் பலரும் சொந்த ஊருக்கு செல்வார்கள், தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாள் முன்பு சென்று குடும்பத்துடன் கொண்டாட விரும்புகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நாளில் மதுரைக்கு செல்ல 900 ரூபாய் ஆக இருந்த கட்டணங்கள்,தற்போது குறைந்த பட்சம் 1600 என்கிற அளவில் உள்ளது. 1800 ரூபாய், 2000 ரூபாய் என்கிற அளவில் கட்டணங்கள் உள்ளன. நவம்பர் 3ம் தேதியும் கட்டணம் அதிகமாக உள்ளது. நவம்பர் 1ம் தேதி அல்லது 2ம் தேதி சென்று பார்த்தால் இந்த கட்டணம் இன்னமும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் பயணிகள்.

கட்டணம் உயர்வு

கட்டணம் உயர்வு

நவம்பர் 1ம் தேதி தொடங்கி 3ம் தேதி வரையில் சென்னையில் இருந்து எங்கு சென்றாலும் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதேபோல் நவம்பர் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரையில் எங்கிருந்து சென்னை வந்தாலும் கட்டணம் அதிகமாக உள்ளது. ஆன்லைனில் போய் பார்த்தாலே எந்த அளவிற்கு கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது என்பது தெரியும் என்கிறார்கள் பயணிகள் சிலர்.

ட்ரிப் ரத்து

ட்ரிப் ரத்து

மேலும் நவம்பர் 2ம் தேதிக்கு கட்டணத்தை ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளிடம் கட்டணம் அதிகரித்துவிட்டதாக கூறி கூடுதல் கட்டணம் கேட்பதாகவும் புகார்கள் உள்ளன. இதேபோல் குறைவான கட்டணத்தில் புக்கிங் செய்யப்பட்ட பேருந்துகளின் டிரிப்புகள் ரத்து செய்யப்பட்டு கட்டணம் திரும்பி அளிக்கப்படுவதாகவும், அதற்கு பதில் வேறு நேரத்தில் பேருந்துகளை இயக்கி கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் உள்ளன.

கட்டணம் எவ்வளவு

கட்டணம் எவ்வளவு

இதற்கு காரணம் ஆம்னிபேருந்துகளுக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்யாமல் இருப்பது என்று பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஆம்னி பேருந்துகளுக்கு இதுவே கட்டணம் என்று நிர்ணயம் செய்ய வேண்டியது அரசின் கடமை என்றும் அதை செய்தால் மட்டுமே மக்கள் ஊருக்கு சென்றுவருவது எளிதாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறுகையில், "சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள்வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பண்டிகை நாட்களில் எப்படியாவது சொந்த ஊருக்கு சென்று விடுவது வழக்கம். மக்களின் இந்த தேவையைப் பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் சாதாரண நாட்களைவிட 80 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கிறார்கள்.

கட்டணம் நிர்ணயம்

கட்டணம் நிர்ணயம்

அதிகரிக்கப்பட்டுள்ள கட்டண விபரங்களை வெளிப்படையாகவே இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஆனால், இதைத்தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது இல்லை. ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயமே செய்யாத நிலையில், அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அரசு கூறுவது ஏமாற்று வேலை என்றும் புகார் தெரிவிக்கிறார்கள்.

உரிமையாளர்கள் கவலை

உரிமையாளர்கள் கவலை

இதனிடையே பயணிகள் புகார்கள் குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர் ஒருவரிடம் கேட்ட போது,தீபாவளி போன்ற பண்டிகை சமயத்தில் குறிப்பிட்ட ஊர்களில் இருந்து அதிக பேருந்துகளை இயக்குகிறோம். அங்கு எந்த ஊரில் இருந்து பேருந்தை கொண்டு வருகிறோமோ, அங்கிருந்து பேருந்து பெரும்பாலும் காலியாக வருகிறது. அதனால் சென்னையில் இருந்து செல்லும் போது சற்று உயர்த்தி வசூலிக்க வேண்டிய நிலை உள்ளது என்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தாங்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. பெரும் சிரமங்களுடனே பேருந்துகளை இயக்கி வருகிறோம் என்று கூறி முடித்துக்கொண்டார்.

அதிகாரிகள் விளக்கம்

அதிகாரிகள் விளக்கம்

பயணிகளின் புகார்கள் குறித்த போக்குவரத்து துணை ஆணையரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர். இதுபற்றி அதிகாரிகள் கூறும் போது, விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக ஏராளமான அதிகாரிகள் கொண்ட குழுவினர் மூலம் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறோம். வழக்கத்தைவிட அதிக கட்டணம் வசூலித்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்கள். போக்குவரத்துத் துறையில் சட்டதிருத்தம் கொண்டுவந்து ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+