ரூ.100-க்கு 10 காய்கறிகள்.. தீபாவளிக்காக ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு'.. எங்கெல்லாம் கிடைக்கும்?
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அத்தியாவசிய காய்கறிகளை 'வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு' என்ற பெயரில் மிகக் குறைந்த விலையில் வழங்க கூட்டுறவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் சென்னையில் இயக்கப்பட உள்ள 4 நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலம் நாளை முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை சிறப்பு விற்பனை செய்யப்படுகிறது.

வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு
வெற்றிப் பயண திட்டம், வெற்றி வீடு திட்டம், வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம் என பல திட்டங்களை தவெக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் 'வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அன்றாடச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய 'வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு' ஒன்று ரூ.100 என்ற சலுகை விலையில், நாளை (வியாழக்கிழமை) முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவுப் பண்டக சாலைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள் மற்றும் 4 நடமாடும் காய்கறி கடைகள் (சென்னையில் மட்டும்) மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது.
10 வகையான காய்கறிகள்
ஒரு காய்கறித் தொகுப்பு ரூ.100 என்ற விலையில் மட்டுமே நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். கூடுதலாகவோ குறைவாகவோ வசூலிக்கக்கூடாது. ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்க வேண்டும். இந்தத் தொகுப்பில் இடம்பெறும் 10 வகையான காய்கறிகளின் கொள்முதல் விலை குழுவால் நிர்ணயிக்கப்படும். இதனுடன் ஒரு தொகுப்புக்கு ரூ. 2.50 என்ற அளவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைக்கான செலவும் கணக்கிடப்பட்டுள்ளது.
பெரிய வெங்காயம் (500 கிராம்), தக்காளி (500 கிராம்), கத்தரிக்காய் (250 கிராம்), உருளைக்கிழங்கு (250 கிராம்), கேரட் (200 கிராம்), பீன்ஸ் (200 கிராம்), பச்சை மிளகாய் (100 கிராம்), எலுமிச்சை (100 கிராம்), இஞ்சி (50 கிராம்), தேங்காய் (400-450 கிராம்) ஆகியவை இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளன.
கொள்முதல் விலை, அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.100 விற்பனை விலை, விநியோகத் தொகை மற்றும் கூட்டுறவு கல்வி நிதிக்கான ரூ.2.50 ஆகியவற்றைக் கணக்கிட்டு விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் கிடைக்கும்?
திருநெல்வேலிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், பூங்கா நகர், காஞ்சிபுரம், வடசென்னை மற்றும் மதுரை கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள் மூலம் இந்தக் காய்கறித் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன. சென்னையில் மட்டும் கூடுதலாக 4 நடமாடும் காய்கறிக் கடைகள் மூலமும் விற்பனை நடைபெறுகிறது.
விலை ரூ.100
ஒரு காய்கறித் தொகுப்பு ரூ.100 என்ற விலையில் மட்டுமே நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். கூடுதலாகவோ குறைவாகவோ வசூலிக்கக்கூடாது. ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணி முதல் விற்பனை தொடங்கப்படும்.
காய்கறிகள் பட்டியல்
1. பெரிய வெங்காயம் - 500 கிராம்
2. தக்காளி - 500 கிராம்
3. கத்தரிக்காய் - 250 கிராம்
4. உருளைக்கிழங்கு - 250 கிராம்
5. கேரட் - 200 கிராம்
6. பீன்ஸ் - 200 கிராம்
7. பச்சை மிளகாய் - 100 கிராம்
8. எலுமிச்சை - 100 கிராம்
9. இஞ்சி - 50 கிராம்
10. தேங்காய் - 400 முதல் 450 கிராம்


Click it and Unblock the Notifications
