சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 நிமிடம் தான்! வாழ்க்கை போயிரும்..தயவுசெஞ்சு உள்ளே விடுங்க! கதறிய தேர்வர்கள்! கறார் காட்டிய ஆபிசர்!

Google Oneindia Tamil News

சென்னை : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், பல தேர்வு மையங்களில் தாமதமாக வந்த தேர்வர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காததால் சாலை மறியல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதோடு, கண்ணீர் விட்ட சம்பவங்களும் அரங்கேறின.

Recommended Video

    3 நிமிடம் தான்! வாழ்க்கை போயிரும்..தயவுசெஞ்சு உள்ளே விடுங்க! கதறிய தேர்வர்கள்! கறார் காட்டிய ஆபிசர்!

    தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 10-ம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக் கூடிய 7,301 குரூப் 4 இடங்களுக்கு இன்று தேர்வு நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

    இதற்காக டிஎன்பிஎஸ்சி விரிவான ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில், ஆண்கள் 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 பேர், பெண்கள் 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வில் விண்ணப்பித்திருந்தனர்.

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு : 7,301 அரசு காலி பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் தேர்வு எழுதினர்! டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு : 7,301 அரசு காலி பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் தேர்வு எழுதினர்!

    குரூப் 4

    குரூப் 4

    காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றறும். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7 ஆயிரத்து 689 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. சென்னையில் 503 இடங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. சென்னையில் மட்டும் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர்.

    தேர்வு மையங்கள்

    தேர்வு மையங்கள்

    இந்த தேர்வில் மொத்தம் 534 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டனர். இதேபோல தமிழகம் முழவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வர்கள் தேர்வெழுதினர். தேர்வுக்கு வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும் தேர்வர்களின் வசதிக்காக தமிழக அரசின் சார்பில் தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

    தாமதம்

    தாமதம்

    தற்போது தேர்வுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், பல தேர்வு மையங்களில் தாமதமாக வந்த தேர்வர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காததால் சாலை மறியல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதோடு, கண்ணீர் விட்ட சம்பவங்களும் அரங்கேறின. சீர்காழி தென்காசியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு 30க்கும் மேற்பட்டோர் சில நிமிடங்கள் தாமதமாக வந்தனர் அவர்களை தேர்வு மைய அதிகாரிகள் தேர்வு எழுதுவதற்காக மையத்திற்குள் அனுமதிக்க மறுத்து விட்டார்.

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    இதனை அடுத்து அவர்கள் அனைவரும் தங்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவேண்டும் எனக்கூறி தேர்வு மைய அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சீர்காழி தாசில்தார் செந்தில் குமாரையும் அவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தாசில்தார் 9 மணிக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் பிறருக்கு அனுமதி அளிக்கப்படாது என திட்டவட்டமாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    English summary
    As the TNPSC Group 4 exams are over, there have been incidents like road blockades and tearful incidents in many exam centers as candidates who arrived late were not allowed inside the exam centre.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X