சம்மர் வெயிலை சமாளிக்க உதவும் கோடை மழை.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்குமாம்! எங்கெல்லாம் தெரியுமா
சென்னை: கோடைக் காலம் நெருங்குவதால் பல இடங்களில் வெயில் நம்மை வாட்டி வதைக்கிறது. அதேநேரம் மாநிலத்தில் சில இடங்களில் நல்ல மழையும் பெய்து வருகிறது.
கோடைக் காலம் நெருங்கும் நிலையில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. இதனால் சில மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

மழை
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்தே இருக்கிறது. அதேநேரம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. திற்பரப்பு (கன்னியாகுமரி) 50 மிமீ மழையும், சின்கோனா (கோவை), பார்வூட் (நீலகிரி), பாலக்கோடு (தர்மபுரி), பொள்ளாச்சி (கோவை), வால்பாறை PTO (கோவை) தலா 40 மிமீ மழையும் பெய்துள்ளது. வெயிலை பொறுத்தவரை அதிகபட்சமாகக் கரூர் பரமத்தியில் 102.2 டிகிரி பரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது.

வானிலை மையம்
அதேபோல வரும் நாட்களில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு மழை
இன்றும் (மார்ச் 31) நாளையும் (ஏப்ரல் 1) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வரும் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 4 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை
அதேபோல சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications