நீட் விலக்கு விவகாரம்.. மத்திய அரசு கேள்விக்கு விரைவில் பதில்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
சென்னை: நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கேட்டுள்ள கேள்விகளுக்கு விரைவில் விரிவான பதில் அனுப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலகாலமாக நீடித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா 2021 செப்டம்பர் மாதம் 13ம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவை அவர் 142 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு ஆளுநர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மசோதா நிலை
இந்த மசோதா குறித்து மத்திய அரசு அண்மையில் விளக்கமளித்துள்ளது. அதில் தமிழக அரசின் நீட் விலக்கு மசோதான், உள்துறை அமைச்சகத்திற்கு மே 2ம் தேதி வந்து சேர்ந்தது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் மாநில ஆளுநர்கள் அனுப்புகிற சட்ட வரைவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு கருத்து கேட்பிற்காக அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படுவது நடைமுறை. அது போன்று மத்திய அமைச்சகங்கள் கருத்து கேட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விளக்கம்
அதனால் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை தங்களின் கருத்துக்களை அளித்து விட்டன. அவற்றை தமிழ்நாடு அரசிடம் ஜூன் 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பகிர்ந்து கொண்டு விளக்கங்களை கேட்டுள்ளோம். இதுபோன்ற பிரச்சினைகளில் கலந்தாலோசனை நேரம் எடுக்கும்; ஒப்புதலுக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது என கூறப்பட்டது.

மா.சுப்பிரமணியன் விளக்கம்
இதன்பின்னர் நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்த கருத்துகளின் விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். இந்த நிலையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதே அரசின் இலக்கு. இந்த விவகாரத்தில் ஏட்டிக்குப் போட்டியாக கருத்து கூறி நீட் விலக்கு முயற்சிக்கு பின்னடைவு ஏற்படுத்த விரும்பவில்லை.

விரைவில் பதில்
மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் ஆகிய துறைகள் தமிழக அரசிடம் கேட்டுள்ள கேள்விகளுக்கு, விரிவான பதில் தயாராகியுள்ளது. விரைவில் அந்த 2 துறைகள் கேட்ட கேள்விக்கு தமிழக அரசு சார்பில் பதில் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications