Deva: "இந்தப் பாடலை பாடியவர் உங்கள்" விஜய்க்கு மறக்க முடியாத பல ஹிட் பாடல்களை கொடுத்த தேவா.. லிஸ்ட்
சென்னை: இந்தப் பாடலை பாடியவர் உங்க விஜய் என திரையில் வருவதற்கு தேனிசை தென்றல் தேவா ஒரு காரணம் ஆகும். முதல் முதலில் இன்றைய முதல்வர் விஜய்யை சொந்த குரலில் பாட வைத்த பெருமை தேவாவுக்கு உண்டு. விஜய் தேவாவின் இசையில் மட்டும் 8 பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் கனா பாடல்களால் இசை உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்தியவர் தேனிசை தென்றல் தேவா. ரஜினிகாந்தின் ஆட்டோக்காரன் பாடல் முதல் பாட்ஷா உள்பட பல மெகா ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்க்கும் பல மறக்க முடியாத பாடல்களை தேவா கொடுத்துள்ளார்.

இந்தப் பாடலை பாடியவர் உங்க விஜய்
விஜய்யை பொறுத்தவரை பல பாடல்களை தானே பாடியுள்ளார். தனது படங்களில் விஜய் ஒரு சில பாடல்களுக்கு பின்னணி பாடகாரக தானே பாடி கொடுத்துள்ளார். எடுத்துக்கட்டாக, ரசிகன் படத்தில் வரும் பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி.., தொட்டபெட்டா ரோட்டு மேலே முட்ட பரோட்டா.. தங்க நிறத்துக்குதான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா.. உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை விஜய்யே பாடியுள்ளார்.
விஜய் முதன் முதலாக பாடிய பாடல் 'பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி' பாடல்தான். இந்த பாடலை சித்ராவுடன் இணைந்து விஜய் பாடியிருந்தார். பாடல் ஓடும் போதே இந்தப் பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்று ஒரு திரையில் கார்டு வரும்.. விஜய் ரசிகர்களை தியேட்டரில் ஆர்ப்பரிக்க வைக்கும். முதன் முதலாக தேவா இசையில்தான் விஜய் பாடகராக அறிமுகம் ஆனார்.
1 மணி நேரத்தில் பாடி முடித்தார் விஜய்
இதுபற்றி தேவா பேட்டி ஒன்றில் கூறியதாவது:- ரசிகன் படத்தில் ஒரு பாடலை விஜய் பாட வேண்டும் என்று அவரது தந்தை சந்திரசேகர் கூறினார். தாராளமாக பாட வையுங்கள் என்று கூறினேன். விஜய் குடும்பத்தில் அனைவரையும் எனக்கு தெரியும். அவர் பாடுவதற்கு என்ன இருக்கிறது. அவர் குடும்பமே பாடுகிற குடும்பம்தான். நல்லா பாடுவாரே.. என்று கூறி இசை அமைத்தேன். நம்ப மாட்டீங்க.. அரை மணி நேரத்தில் கற்றுக்கொண்டு 1 மணி நேரத்தில் பாடி முடித்துவிட்டார்"என்று கூறினார்.
தேவா இசையில் விஜய் பாடிய பாடல்கள்
* ரசிகன் படத்தின் முதல் முதலாக பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
* தேவா படத்தில் அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு.. அதே படத்தில்
* ஒரு கடிதம் எழுதினேன்.. மற்றும் கோத்தகிரி குப்பம்மா என்ற பாடல்..
* விஷ்ணு படத்தில் தொட்டபெட்டா ரோட்டு மேலே முட்ட பரோட்டா என்ற பாடல்..
* மாண்புமிகு மாணவன் படத்தில், திருத்தணி போனா மொட்ட.. என்ற பாடல்..
* காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற படத்தில் அஞ்சாம் நம்பர் பஸ்சில் ஏரி..
* நெஞ்சினிலே படத்தில் தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா என்ற பாடல்.. உள்ளிட்ட பாடல்களை தேவா இசையில் விஜய்யே தன் குரலில் பாடியுள்ளார்.
விஜய் மற்றும் தேவா கூட்டணியில் வெளிவந்த படங்கள்
ரசிகன் (1994)
தேவா (1995)
விஷ்ணு (1995)
மாண்புமிகு மாணவன் (1996)
காலமெல்லாம் காத்திருப்பேன் (1997)
ஒன்ஸ் மோர் (1997)
நேருக்கு நேர் (1997)
நினைத்தேன் வந்தாய் (1998)
நெஞ்சினிலே (1999)
மின்சார கண்ணா (1999)
குஷி (2000)





Click it and Unblock the Notifications
